ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

தொடரும் மழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை..!

தொடரும் மழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை..!

சதுரகிரி

சதுரகிரி

Sivaganga | மழையின் காரணமாக ஐப்பசி மாத பௌர்ணமிக்கு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Sivaganga, India

  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர்.

  இதன் காரணமாக மாதந்தோறும் பிரதோஷம் , பௌர்ணமி அமாவாசையை முன்னிட்டு மட்டும் மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால்  தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்லும் மாமரத்து ஓடை, வலுக்குப்பாறை, சங்கிலிப்பாறை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது.

  அதனால் வரும் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை  முன்னிட்டு  05ம் தேதி முதல் 9ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  Also see... மார்க் ஷீட்டில் திருத்தம்.. பெற்றோருக்கு போன் செய்து கண்டித்த ஆசிரியை - பயத்தில் விபரீத முடிவு எடுத்த சிறுமி

  இருந்தபோதிலும் தொடர்ந்து இதுபோன்று தடை விதிப்பதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் பாலம் கட்டும் பணியை துவங்கி பக்தர்கள் தடையின்றி கோயிலுக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  செய்தியாளர்: M. செந்தில்குமார் சிவகாசி 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Virudhunagar