ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

சிவகாசி அருகே அடுத்தடுத்த 2 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

சிவகாசி அருகே அடுத்தடுத்த 2 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து

Sivakasi fire accident | சிவகாசி தாயில்பட்டியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அதேபோல செங்கமலப்பட்டி ஆலை விபத்திலும் ஒருவர் பலியாகினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivakasi | Virudhunagar

சிவகாசியில் ஒரே நாளில் இருவேறு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கனஞ்சம்பட்டியில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வழக்கம் போல் பட்டாசு உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 10 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.

இதில், சத்திரப்பட்டி சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண் தொழிலாளி உட்பட இருவர், இடிபாடுகளுக்குள் சிக்கி, உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், கருப்பசாமி, மாரீஸ்வரன், மாரிமுத்து, ராஜ்குமார் உள்ளிட்ட 7 தொழிலாளர்கள் படுகாயத்துடன் சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வெடிவிபத்து குறித்து வெம்பகோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், வெடி விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக, இன்று காலை செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து எற்பட்டது. பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, ரசாயன, மூலப் பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஓர் அறை ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் ரவி என்ற தொழிலாளி உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

செய்தியாளர்: M.செந்தில்குமார், சிவகாசி.

First published:

Tags: Crackers, Fire accident, Local News, Sivakasi, Virudhunagar