Home /News /virudhunagar /

ராஜபாளையத்தில் போதையில் இரவில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள்..

ராஜபாளையத்தில் போதையில் இரவில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள்..

போதை போட்டுக்கொண்டு தெருவில் அடாவடியாக திரியும் சிறுவர்கள்

போதை போட்டுக்கொண்டு தெருவில் அடாவடியாக திரியும் சிறுவர்கள்

Virudhunagar | ராஜபாளையத்தில் போதையில் வரும் சிறுவர்கள், நிதானமின்றி இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள அம்பலபுளி பஜார், பூபால் பட்டி தெரு மற்றும் சுப்பிரமணியர் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்குள் இரவு 11 மணிக்கு மேல் வரும் பள்ளி சிறுவர்கள் மது போதையில்,  ஆபாச வார்த்தைகளை சரமாரியாக பேசிக் கொண்டு தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை உடைப்பது, கற்களை எடுத்து வீட்டின் கதவில் எறிவது, கதவுகளை காலால் உதைத்து உடைக்க முயல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வாட்சப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த பள்ளி சிறுவர்கள் கூட்டமாக வருவதால் அப்பகுதியில் வசிக்கும் பெண்களால் அவர்களை தட்டி கேட்க முடிவதில்லை. சிலர் கேட்டாலும் நிதானமின்றி அவர்களை தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளதாக பொது மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    மது வாங்க பணம் போதவில்லை என்ற நிலையில், சில சமூக விரோதிகள் மூலம் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதாகவும் தெரிய வருகிறது. இதை கண்டிக்க வேண்டிய காவல் துறையும், இந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    Also see... கழக முன்னோடிகளை பெரியாராக, அண்ணாவாக பார்த்து மகிழ்கிறேன் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    இதே நிலை தொடர்ந்தால் அந்த சிறுவர்கள் நிரந்தரமாக போதைக்கு அடிமையாகி விடுவதுடன், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும். எனவே சிறுவர்களின் கைகளில் போதைப் பொருட்கள் கிடைக்காமல் இருக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: M.செந்தில்குமார், சிவகாசி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Rajapalayam Constituency, Sivakasi

    அடுத்த செய்தி