ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

காதலி பேச மறுத்ததால் விரக்தி... காதலி வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட காதலன்

காதலி பேச மறுத்ததால் விரக்தி... காதலி வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட காதலன்

மாதிரி படம்

மாதிரி படம்

வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த தேவகுமார் காதலி பேசததால் அங்கிருந்து திரும்பி வந்து காதலி வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Virudhunagar, India

  விருதுநகர் அருகே  பேச மறுத்ததால் காதலி வீட்டின் முன் தீக்குளித்து என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  விருதுநகர் அருகே உள்ள டி.காமராஜர்பு ரத்தை சேர்ந்தவர் கோவில்பிச்சை ( 51). இவருடைய மகன் தேவகுமார்(24) என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் கடந்த ஒரு ஆண்டாக துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து தந்தையின் சம்மதத்துடன் திருமணம் செய்யவும் முடிவு செய்திருந்தார்.

  இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அந்த பெண், தேவகுமாருடன் பேச  மறுத்ததாக தெரிகிறது. இதை தேவகுமார் தனது தந்தையிடம் தெரிவித்ததோடு, மன உளைச்சலில் இருப்பதாகவும், ஊருக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனால் கோவில் பிச்சை தன் மகனை  ஊருக்கு வருமாறு சொல்லியுள்ளார்.

  அதன்படி ஊர் திரும்பிய தேவகுமார், தான் காதலித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். அங்கிருந்து திரும்பி வந்த அவர், அந்த பெண் தன்னிடம் பேச வேண்டாம் என்று கூறி விட்டதாக தனது தந்தையிடம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார். மகனுக்கு கோவில்பிச்சை ஆறுதல் கூறிய நிலையில், சம்பவத்தன்று இரவில் தேவகுமார் பெட்ரோல் கேனுடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

  இதையும் படிங்க: சிறுத்தை உயிரிழந்த விவகாரம் : ரவீந்திரநாத் எம்.பி.-க்கு சம்மன் அனுப்பிய வனத்துறை!

  இதையறிந்த கோவில்பிச்சை பதறியபடி அங்கு விரைந்து சென்றார். ஆனால் அதற்குள் தேவகுமார் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த தேவகுமார் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து  கோவில் பிச்சை கொடுத்த புகாரின் பேரில் வச்சக் காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி பேசாத காரணத்திற்காக இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்த  சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Crime News, Virudhunagar