முகப்பு /செய்தி /Virudhunagar / அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது

பாஜகவினர் கைது

பாஜகவினர் கைது

Virudhunagar : விருதுநகரில் மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் தட்டியது தொடர்பாக, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

விருதுநகரில் அரசு விழாவில் மனு கொடுத்த பெண்ணின் மனுவை வாங்கி, பெண்ணின் தலையில் செல்லமாக அமைச்சர் தட்டிய விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  அமைச்சர் வீட்டை முற்றுகையிட உத்தரவிட்டதையடுத்து, பாஜகவினர் அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சித்தபோது, போலீசார் பாஜகவினரை  குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

விருதுநகரில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் 100 சதவிகித மானியத்தில் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் திட்ட விழா நடைபெற்றது. இதில், மாவட்டத்தில்  11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் தமிழக அரசு மூலமாக வெள்ளாடுகள் வழங்கப்படுகின்றன.

அதன் ஒரு கட்டமாக விருதுநகர் மாவட்டம்,  பாலவநத்தத்தில்  கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் செம்மறியாடுகள் வெள்ளாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  100 பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார்.

விழா நிறைவடைந்ததும்  மேடடைவிட்டு காரை நோக்கி சென்றார் அமைச்சர், அப்போது ஒரு வயதான பெண்மணி தனது மகளுடன் முதியோர் பென்சனுக்காக கேட்டு மனு கொடுத்தார். அப்போது அந்த மனுவை பெற்று கொண்ட அமைச்சர் தெரிந்தவர்கள் என்பதால் உரிமையுடன் செல்லமாக மனுவை வைத்து தலையில் செல்லமாக தட்டினார். இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வீடியோவை டிவீட் செய்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மனு கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய அமைச்சர் பதவி விலகாவிட்டால் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

Must Read : கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளை அரசுடைமையாக்க வேண்டும் - இந்து முன்னணி மாநில தலைவர்

இந்நிலையில் பாஜகவினர் விருதுநகர் பத்திர பதிவு அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு மாவட்டதலைவர் பாண்டுரங்கன் தலைமையில் அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிசென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். இதனால் விருதுநகர் - மதுரை சாலையில் போக்குவரத்து ஒருமணி நேரம் பாதிக்கப்பட்டது.

செய்தியாளர் - கணேஷ்நாத் அய்யம்பெருமாள், விருதுநகர்.

First published:

Tags: BJP, DMK, Protest, Virudhunagar