Home /News /virudhunagar /

டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை... அதிர்ச்சியில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள்

டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை... அதிர்ச்சியில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள்

டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை

டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை

Virudhunagar | காற்று மாசுபாட்டை காரணமாக வைத்து இந்த ஆண்டும் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் பட்டாசு தொழில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

    உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது. சரவெடி தயாரிப்பதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் ஏற்கனவே பட்டாசு தொழில் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் உற்பத்தியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய ஆர்டர்களை உற்பத்தி செய்து அனுப்பும் பணியில்  தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள. இந்நிலையில்,  டெல்லி மாநில அரசு வருகிற ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசுகளை வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடைவிதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்த அறிவிப்பானது சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது காற்று மாசை காரணம் காட்டி டெல்லி மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியாக இருப்பதாகவும் இதே போல் மற்ற மாநிலங்களிலும் பட்டாசுகளை வெடிக்க தடை விதித்தால் இந்த தொழில் அழிவை சந்திக்க கூடிய ஒரு நிலை ஏற்படும் என்றும் இந்த தொழிலை நம்பி உள்ள எட்டு லட்சம் தொழிலாளருடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக என்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    மேலும் சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகள் 90% வெளிமாநிலங்களுக்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படி வெளி மாநிலங்களில் பட்டாசுகளை விற்பதற்கு தடை விதிக்கும் பட்சத்தில் இந்த தொழிலை நடத்த முடியாத ஒரு நிலை ஏற்படும் என்றும் இதை நம்பியுள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

    Also see... அதிமுக அலுவலகத்திற்கு இபிஎஸ் செல்வது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்: புகழேந்தி

    அதனால் இது சம்பந்தமாக மத்திய மாநில அரசுகள் தலையிட்டு வெளி மாநிலங்களில் பட்டாசுகளை வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் பட்டாசு தொழிலை காக்க தமிழக முதலமைச்சர் உடனடியாக டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசவேண்டும் என்றூம் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.

    செய்தியாளர்: M.செந்தில்குமார், சிவகாசி 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Ban firecrackers, Delhi, Sivakasi

    அடுத்த செய்தி