மாணவியிடம் கல்லூரி சேர்மன் ஆபாசமாக பேசியதாக வீடியோ வெளியான நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நர்சிங் கல்லூரி மாணவிகள், தங்களை மாற்று கல்லூரிகளில் சேர்க்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் அரசு நர்சிங் கல்லூரி என்ற தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியின் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் (இவர் முன்னாள் பாஜக சிறுபாண்மை பிரிவு மாவட்ட தலைவர்) கடந்த 6 மாதத்திற்கு முன் அதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபாசமாக பேசியதாக கூறப்படும் வீடியோ தற்போது அந்த கல்லூரி மாணவிகளிடம் பரவியது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள், கல்லூரியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கல்லூரிக்குச் செல்லாமல் கல்லூரி வாயிலில் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மாணவிகளை சமரசம் செய்ய வந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கல்லூரியில் தங்கள் எதிர்காலம் குறித்தும் தங்களுடைய சான்றிதழ்கள் மற்றும் கட்டிய பணத்தை உடனடியாக திரும்பி தர வலியுறுத்தியும், கல்லூரி மாணவிகள் மற்றும் பெற்றோர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழைய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் எனக்கூறி, போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதானத்தை ஏற்காமல் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தால் மதுரை விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் மாணவிகளிடம் உடன் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனை தொடர்ந்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கல்லூரி சேர்மன் மீது 7 பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து தாஸ்வின் ஜான் கிரேஸை ஸ்ரீ வில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பு (சிவகாசியில் உள்ள நீதிபதி இல்லத்தில்) ஆஜர்படுத்திய நிலையில் வரும் 24ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Must Read : ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் - வைகோ காட்டம்
அதன்படி, கைது செய்யபட்ட கல்லூரி சேர்மன் விருதுநகர் சிறைச்சாலை அடைத்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவ மாணவிகள் வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் - கணேஷ்நாத், விருதுநகர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College chairman, College girl, Nursing, Protest, Virudhunagar