ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

வீட்டில் படமெடுத்து ஆடிய 5 அடி நல்ல பாம்பு.. அலறியடித்து ஓடிய குழந்தைகள்.. ராஜபாளையத்தில் அதிர்ச்சி!

வீட்டில் படமெடுத்து ஆடிய 5 அடி நல்ல பாம்பு.. அலறியடித்து ஓடிய குழந்தைகள்.. ராஜபாளையத்தில் அதிர்ச்சி!

வீட்டில் படமெடுத்த பாம்பு

வீட்டில் படமெடுத்த பாம்பு

Rajapalayam snake | நெல் கொட்டி வைத்திருந்த டிரம்முக்குள் பதுங்கியிருந்த பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rajapalayam | Virudhunagar

ராஜபாளையம் அருகே விவசாயியின் வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வேட்டை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் விவசாயியாக இருந்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி. இந்த தம்பதியினர் அவர்களது வீட்டில் உள்ள ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் நெல் சேகரித்து வைத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று ஜோதி வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அவரது குழந்தைகள் டிரம்மின் அருகில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது டிரம்மில் இருந்து ஒரு சத்தம் கேட்டது. உடனே அருகே சென்று பார்த்தபோது டிரம் மூடியின் மேல் பகுதியில் வால் போன்று லேசாக தெரிந்தது.

இதையடுத்து ஜோதி மணி டிரம்மை திறந்து பார்த்த போது  நெல்மணிக்குள் பாம்பு பதுங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை கண்ட குழந்தைகளும் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக மீட்டு மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் விடுவித்தனர்.

செய்தியாளர்: M.செந்தில்குமார், சிவகாசி.

First published:

Tags: Local News, Rajapalayam Constituency, Snake, Virudhunagar