Home /News /virudhunagar /

அருப்புக்கோட்டையில் சிறுவனை வாளால் தாக்கிய 5 பேர் கைது... வெளியான வீடியோவால் பரபரப்பு...

அருப்புக்கோட்டையில் சிறுவனை வாளால் தாக்கிய 5 பேர் கைது... வெளியான வீடியோவால் பரபரப்பு...

அருப்புக்கோட்டையில் சிறுவனை வாளால் தாக்கிய 5 பேர் கைது

அருப்புக்கோட்டையில் சிறுவனை வாளால் தாக்கிய 5 பேர் கைது

Virudhunagar | விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் சிறுவனை வாளால் தாக்கிய 5 பேரை போலீசார்  கைது செய்தனர். அந்த சிறுவன் அடிவாங்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெள்யாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பொன்னகரம் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் என்பவர் மகன் ஹரி பிரசாத்(17). சிறுவன் ஹரிபிரசாத்திற்கும் அஜிஸ்நகரை சேர்ந்த ஜெட்சன்(20) என்ற இளைஞருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பணம் கொடுப்பதை பற்றி உன்னிடம் பேச வேண்டும் அஜிஸ்நகர் நகராட்சி பூங்கா அருகே வந்து விடு என ஹரிபிரசாத்திடம் ஜெட்சன் கூறி உள்ளார்.

    இதை நம்பி சிறுவன் ஹரி பிரசாத் தனது நண்பருடன் அஜிஸ்நகர் பூங்கா அருகே சென்றுள்ளார். அப்போது ஜெட்சன் மற்றும் அவரது கூட்டாளிகள் என ஐந்து பேர் சேர்ந்து ஹரிபிரசாத்யையும் அவருடன் வந்த நண்பரையும் தாக்கியுள்ளனர். அப்போது அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு வெளியே வந்ததால் பிரச்சனையை திசை திருப்புவதற்காக அவர்கள் கஞ்சா விற்பதாகவும் அதனால் அடிப்பதாகவும் கூறி சமாளித்துள்ளனர்.

    இதனை ஜெட்சன் கூட்டாளி ஒருவர் தனது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் பெரிய வாளை வைத்து சிறுவன் ஹரிபிரசாத்தையும் அவரது நண்பரையும் மூர்க்கத்தனமாக அந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் உடனடியாக நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அனைவரையும் அங்கிருந்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

    Also see... பரந்தூரில் விமான நிலையம்.. கிராம மக்கள் மகிழ்ச்சி

    இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிறுவன் ஹரிபிரசாத் அளித்த புகாரின் பேரில் அஜிஸ் நகரை சேர்ந்த ஜெட்சன்(20),  அன்பு நகரைச் சேர்ந்த ஜோயல்(19) , வேல்முருகன் காலனியைச் சேர்ந்த சண்முகவேல்(22), சிஎஸ்ஐ காம்பௌண்ட் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மோகன்ராஜ்(20), ராமலிங்க ஆர்ச் பகுதியை சேர்ந்த அபிஷேக்(19) ஆகிய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான ஜெட்சன் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பியது  குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: கணேஷ்நாதன், அருப்புக்கோட்டை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Fight, Virudhunagar

    அடுத்த செய்தி