Home /News /virudhunagar /

4,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு உலை - ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்டுபிடிப்பு

4,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு உலை - ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்டுபிடிப்பு

இரும்பு உருக்கு உலை  தடயங்கள்

இரும்பு உருக்கு உலை தடயங்கள்

Virudhunagar : நீள்வட்ட வடிவிலான 2 சுடுமண் உலைக்களங்கள் புதைந்த நிலையில் உள்ளன. இங்கு காணப்படும் தொல்பொருட்கள் மூலம் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கும் உலை இவ்வூரில் இருந்திருப்பதை அறியமுடிகிறது.

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் 4,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு உலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமம் காவல்தோப்பு பேச்சியம்மன் கோயில் எதிரில் உள்ள மேட்டில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

    அங்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் இரும்புத் தாதுக்கள், இரும்புக் கழிவுகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கல் சுத்தியல்களின் உடைந்த பாகங்கள், சுடுமண் குழாய்கள், கல் குண்டு ஆகியவை சிதறிக் கிடப்பது கண்டறியப்பட்டது. இவை 4,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு உலையின் தடயங்கள் என்பது தெரியவந்துள்ளது.

    இரும்புத் தாதுவை கல் சுத்தியல் கொண்டு சிறியதாக உடைத்து ஊது உலையிலிட்டு உருக்கி இரும்பைப் பிரித்தெடுத்துள்ளனர். இத்தாதுக்களை உருக்க, அதிக வெப்பம் தேவை என்பதால் ஊது உலையில் அதிக அழுத்தத்துடன் காற்றைச் செலுத்த சிறிய துளைகள் கொண்ட சுடுமண் குழாய்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இரும்பு உருக்கு உலை தடயங்கள் கண்டுபிடிப்பு


    இங்கே, நீள்வட்ட வடிவிலான இரண்டு சுடுமண் உலைக்களங்கள் புதைந்த நிலையில் உள்ளன. இங்கு காணப்படும் தொல்பொருட்கள் மூலம் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கும் தொழிற்சாலை இவ்வூரில் இருந்திருப்பதை அறிய முடிகிறது. அகழாய்வு மூலம் அரசு இதை வெளிக்கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆய்வாளர்


    Must Read : நான் விளம்பரப் பிரியனா? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்

    இங்கே இருமல், பாம்புக்கடி, நீரிழிவு ஆகிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் கொக்கிமுள் ஆதண்டை என்ற அரியவகை மூலிகைத் தாவரம் இங்கு இயற்கையாக வளர்ந்து வருகிறது என்ற கூடுதல் தகவலும் தெரியவந்துள்ளது.

    செய்தியாளர் - M.செந்தில்குமார், சிவகாசி. 
    Published by:Suresh V
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி