ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

சாலையை கடந்த 21 ஆடுகள்.. அடித்துதூக்கிய குடிகார கார் டிரைவர்... சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்.!

சாலையை கடந்த 21 ஆடுகள்.. அடித்துதூக்கிய குடிகார கார் டிரைவர்... சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்.!

பலியான ஆடுகள்

பலியான ஆடுகள்

Virudhunagar News : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலையை கடக்க  முயன்ற  ஆடுகள் மீது கார் மோதிய விபத்தில் 21 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலி.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி முருகன் (23), 500 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். இவர் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் கிடை ஆடு அமைத்து வளர்த்து வருவது வழக்கம்.

இந்நிலையில், அவர் தற்போது சாத்தூர் அருகில் உள்ள சின்னக்காமன்பட்டி பகுதியில் கிடை ஆடு அமைத்து வளர்த்து வருகிறார். நேற்று இரவு சின்னகாமன்பட்டி காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற சில ஆடுகள் திரும்ப வராததால் அப்பகுதியில் பாண்டி முருகன் தேடி அலைந்து உள்ளார்.

காணாமல்போன சுமார் 50 ஆடுகளை கண்டுபிடித்து மீண்டும் கிடைபோட்ட இடத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சின்னக்காமன்பட்டி பேருந்து நிலையத்தின் அருகே சாத்தூர் சிவகாசி சாலையை ஆடுகள் கடந்து சென்று கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி வந்த கார் ஒன்று அதிவேகமாக வந்து ஆட்டு கூட்டத்தின் இடையே புகுந்தது.

இதையும் படிங்க : சி.வி.சண்முகம் VS அண்ணாமலை... அதிமுக - பாஜக திடீர் மோதல் பின்னணி?

இதில் ஏராளமான ஆடுகள் காரில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டன. இதில் பலத்த காயம் அடைந்த சுமார் 21 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து ஏற்படுத்திய காரை மடக்கி பிடித்தனர்.

இதுதொடர்பாக, கார் ஓட்டுநர் சிவகாசி தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த  அனந்தனிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் மது போதையில் வாகனம் ஓட்டிவந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாலை விபத்தில் கார் மோதி பலியாகிய ஆடுகளை சாத்தூர் கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்து ஆடுகளை புதைத்தனர்.

செய்தியாளர் : செந்தில்குமார் - சிவகாசி 

First published:

Tags: Crime News, Local News, Virudhunagar