Home /News /virudhunagar /

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சோகம்.. சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சோகம்.. சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

விநாயகர் சதுர்த்தி விழா... இராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு...

விநாயகர் சதுர்த்தி விழா... இராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு...

Rajapalayam | இராஜபாளையம் அருகே நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று  ஆறுதல் கூறினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rajapalayam, India
    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே விநாயகர் ஊர்வலம் முடிந்து திரும்பிய இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி இராஜபாளையம் அருகே சொக்கனாமுத்தூர் பகுதியில் நேற்று இரவு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊரில் உள்ள குளத்திற்கு விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கரைக்கப்பட்டது.  ஊர்வலம் நிறைவடைந்ததை அடுத்து சிலைகளை கொண்டு சென்ற வண்டியை இரவு ஊருக்குள் திருப்பி கொண்டுவரும் போது தென்காசி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பகுதியில் ட்ரான்ஸ்பார்மரில் உள்ள மின் வயரில் எதிர்பாராத விதமாக வண்டி சிக்கியது.

    சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில்  முனீஸ்வரன், மாரிமுத்து, சேபுகபாண்டியன், செல்ல பாண்டியன், முப்பிடாதி ஆகிய ஐவரும் காயமடைந்தனர். இதில் முனீஸ்வரன், மாரிமுத்து இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இந்த சம்பவத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சென்ற தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாத ரெட்டி ஆகியோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.



    Also see... பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் மேற்கூரை விழுந்து 2 பேர் உயிரிழப்பு 

    மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர்கள் விபத்தில் மரணம் அடைந்த இருவரின் உடல்களுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.

    செய்தியாளர்: M.செந்தில்குமார் சிவகாசி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Accident, Crime News, Dead, Rajapalayam Constituency, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி, Virudhunagar

    அடுத்த செய்தி