Home /News /virudhunagar /

30 ஆண்டுகளாக முழுமையாக பயன்பாட்டுக்கு வராமலிருக்கும் விருதுநகர் புதிய பேருந்து நிலையம்- காரணம் என்ன?

30 ஆண்டுகளாக முழுமையாக பயன்பாட்டுக்கு வராமலிருக்கும் விருதுநகர் புதிய பேருந்து நிலையம்- காரணம் என்ன?

விருதுநகர் பேருந்து நிலையம்

விருதுநகர் பேருந்து நிலையம்

விருதுநகரில் 1992-ம் ஆண்டு கட்டப்பட்ட பேருந்து நிலையம் தற்போது வரையில் முழுமையாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    விருதுநகர் புதிய பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளதால் பேருந்து நிலையம் சேதமடையும் நிலையில் உள்ளது.

    விருதுநகரில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளை‌ இயக்க, விருதுநகர் கோவில்பட்டி சாலையில் கர்ம வீரர் காமராஜர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு 1992 மே 3ம் தேதி திறக்கப்பட்டது. முதல் ஆறு மாதங்களில் இங்கிருந்து தான் பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னர் சில வியாபார அமைப்புக்களின் தலையீடு காரணமாக மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தே வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

    பயன்பாடில்லாத நிலையில் பேருந்து நிலையம்


    தற்போது பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு வராமலே முடங்கி கிடக்கிறது. இதனால் பேருந்து நிலையம் பராமரிப்பின்றி சேதமடைந்து வருகின்றது.

    சேதமடைந்த நிலையில் பேருந்து நிலையம்


    பெயரளவில் கடமைக்கு ஒரு சில கோவில்பட்டி செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் ஒரு ரவுண்டு அடித்து செல்கின்றன. இன்னும் சில பேருந்துகள் புதிய பேருந்து நிலைய வாசலிலே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன.

    விருதுநகர் பேருந்து நிலையம்


    புதிய பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்தும் திருநெல்வேலி, நாகர்கோவில் பேருந்துகள் நகருக்குள் வராமலே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுவிடுகின்றன. அவர்களை பொருத்தவரை விருதுநகர் நிறுத்தம் என்றால் அது விருதுநகர் பிஆர்சி டிப்போவும், ஆட்சியர் அலுவலக நிறுத்தமும் தான். இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    பயன்பாடில்லாமல் இருக்கும் பேருந்து நிலையம்


    இது குறித்து புதிய பேருந்து நிலையம் அருகில் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகள் பேருந்து நிலையத்தை நம்பியே தொழில் தொடங்கியதாகவும் தற்போது தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.

    பயன்பாடில்லாமல் இருக்கும் பேருந்து நிலையம்


    பல ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் இந்த பேருந்து நிலையத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் பலமுறை முயற்சி செய்தும் பலனில்லை. இந்த விவகாரத்தில் போக்குவரத்துத்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    சேதமடைந்த பேருந்து நிலையத்தை புணரமைத்து உள்ளூர் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் வெளியூர் பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி