Home /News /virudhunagar /

சாத்தூரில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

சாத்தூரில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

விருதுநகரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு

விருதுநகரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு

சாத்தூரில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
விருதுநகர் மாவட்டத்தில் சோழர் கால கல்வெட்டுகள் பந்தல்குடி, ஶ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, கோவிலாங்குளம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றுள் இதுவரை மூன்றாவது குலோத்துங்க சோழனின் காலத்து கல்வெட்டு கண்டறியப்படவில்லை. தற்போது முதல் முறையாக சாத்தூர் அருகே மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோல்வார்பட்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ளது சிவந்திபட்டி கிராமம். இப்பகுதி மக்கள் அர்ஜுனா நதிக்கரையில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு பழங்கால கல்லை வழிபட்டு வந்தனர். இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது பற்றி யாரும் கண்டுகொள்ளாத நிலையில், அவ்வூரை சேர்ந்த கணேஷ் பாண்டியன் என்பவர் இது பற்றி அருப்புக்கோட்டை வரலாற்று துறை பேராசிரியர் விஜயராகவனிடம் தெரிவித்தார்.

கல்வெட்டைப் படிக்கும் மாணவர்கள்


 

பின்பு விஜயராகவன் மற்றும் இரண்டு தொல்லியல் துறை மாணவர்கள் இக்கல்வெட்டை ஆய்வு செய்தனர். இக்கல்வெட்டு ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இயக்குநர் சாந்தலிங்கம் என்பவரின் உதவியுடன் படிக்கப்பெற்றது.

13-ம் நூற்றாண்டு கல்வெட்டு


அப்போது இக்கல்வெட்டானது 13ம் நூற்றாண்டை சேர்ந்த மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்டது என தெரியவந்துள்ளது. 6 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட அக்கல்வெட்டில் இருஞ்சோ நாட்டில் (தற்போதைய சாத்தூர்) உள்ள குளமும், இருப்பைக் குடியில் (இருக்கன்குடி) உள்ள குளமும் தூர்வாரப்படாமல் உள்ளது.

கல்வெட்டைப் படிக்கும் மாணவர்


இதை ஆலங்குடி அரையா திச்சனான அழகிய பாண்டிய கருநிலக்குடி நாடாள்வான் என்பவரும், அவரது படைபிரிவான அறநிலை ஒதுக்கிகள் என்ற அமைப்பினரும் சேர்ந்து இவ்விரு குளங்களையும் தூர்வாரி கால்வாய் அமைத்துள்ளனர். இதற்காக இவ்வூர் மக்கள் பொற்றனேரி என்ற ஊரில் நன்செய் புன்செய் நிலங்களை வழங்கினர் என்று எழுதப்பட்டுள்ளது. 13ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால கல்வெட்டை இப்பகுதி மக்கள் பாண்டிமுனீஸ்வரராக வழிபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி