முகப்பு /செய்தி /விழுப்புரம் / காதலிக்கு காதலர் தின பரிசு.. பல்சர் பைக்கில் சென்று ஆடு திருடிய இளைஞர்கள்.. விழுப்புரம் சம்பவம்..!

காதலிக்கு காதலர் தின பரிசு.. பல்சர் பைக்கில் சென்று ஆடு திருடிய இளைஞர்கள்.. விழுப்புரம் சம்பவம்..!

ஆடு திருட்டு - இளைஞர் கைது

ஆடு திருட்டு - இளைஞர் கைது

காதலர் தினம் கொண்டாட இளைஞர்கள் ஆடு திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மலையரசன் குப்பம் கிராமத்தில் ரேணுகா என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, இரு இளைஞர்கள் ஆடு ஒன்றினை தூக்கி கொண்டு பல்சர்  இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஆட்டினை திருடி செல்வதை கண்ட ரேணுகா திருடன், திருடன் என கூச்சலிட்டுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆட்டினை திருடிச் சென்ற கல்லூரி மாணவன் அரவிந்த் குமார் (20) மற்றும் அவனது நண்பன் மோகன் (20) ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இளைஞர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், காதலிக்கு பரிசு வாங்கிக் கொடுக்க கல்லூரி மாணவர் அரவிந்திடம் பணம்  இல்லாத காரணத்தாலும்,  காதலர் தினத்தை கொண்டாடுவதற்கும் ஆட்டினை திருடியதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கண்டாச்சிபுரம் பகுதிகளில் ஆடு திருடுவது தொடர்ந்து நடைபெற்று வருவதால் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரனை செய்து வருகின்றனர். காதலர் தினம் கொண்டாட இளைஞர்கள் ஆடு திட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- குணாநிதி ஆனந்தன், விழுப்புரம் செய்தியாளர்

First published:

Tags: Crime News, Theft