ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

வீடியோ ரெக்கார்ட் செய்து பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. பாய்ந்த போக்சோ!

வீடியோ ரெக்கார்ட் செய்து பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. பாய்ந்த போக்சோ!

கைதான நபர்

கைதான நபர்

sexual harassment | செஞ்சி அருகே நீலாம்பூண்டி கிராமத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்த வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Viluppuram, India

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ பதிவு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நீலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி. இவரை அவலூர்பேட்டை பகுதியை சேர்ந்த ஞானசேகர் (26) என்ற இளைஞர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார். பின்னர் மாணவியை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

  இதனால் செய்வதறியாது தவித்த பள்ளி மாணவி இது தொடர்பாக தன்னுடைய பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்தவுடனேயே மாணவியின் பெற்றோர்கள் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிதுள்ளனர்.

  Also see... இவ்வளவு வெயிட்டா? வலையை சுத்தம் செய்த மீனவர்.. கையில் சிக்கிய வெடிபொருள்!

  அந்த புகாரின் அடிப்படையில் இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்துறையினர் அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்       

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Pocso, Sexual harassment, Video, Villupuram