விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் சந்திரசேகரன். தனது திருமணத்திற்காகச் சேமித்து வைத்திருந்த ரூ 9.50 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ள நல்லாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். சென்னையிலுள்ள HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தில் மூத்த தொழில்நுட்பத் வல்லுனராக பணியாற்றிவருகிறார். இவர் கடந்த கொரோனா பெறுந்தொற்று பொதுமுடக்கம் காலத்தில் சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது தன் கிராமத்தில் உள்ள தான் வசிக்கும் ஈஸ்வரன் கோவில் தெரு 25 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட நிலையில் தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் புழுதி ஏற்பட்ட நிலையில் மழை காலங்களில் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இருசக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலையை கண்ட சந்திரசேகரன். அரசுக்கு கோரிக்கை வைத்து 6 மாத காலம் அரசு அலுவலகங்களுக்கு அலைந்துள்ளார்.
இறுதியில் நிதி இல்லை என அதிகாரிகள் கூறிய நிலையில். தனது சொந்த செலவில் சாலை அமைக்க திட்டமிட்ட சந்திரசேகரன் இது குறித்து அதிகாரிகளிடம் விவரம் கேட்டுள்ளார். நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்று தனது திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தில் 10.50 லட்சம் செலவில் ஈஸ்வரன் கோயில் தெருவில் 14 அடி அகலத்தில், 15 செ.மீ உயரத்தில் 300மீட்டர் தூரத்திற்கு சிமண்ட் சாலை அமைத்துள்ளார். தற்போது வாகனங்கள் செல்லவும், குழந்தைகள் விளையாடவும் ஏற்ற வகையில் இந்த சிமண்ட் சாலை உள்ளதால் அப்பகுதி பொது மக்கள் இளைஞரின் தன்னமற்ற சேவையை வெகுவாக பாரட்டி வருகின்றனர்.
இது குறித்து சந்திரசேகரன் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சீமரைக்கப்பட்ட இந்த சாலை மிக மோசமான நிலையில் இருப்பதை கண்டு சரிசெய்ய அரசிடம் கோரிக்கை வைத்தேன் ஆனால் நிதி இல்லை எனக்கூறி மறுத்துவிட்டனர். அதனால் என்னுடைய சொந்த நிதியில் இருந்து இந்த சாலையை அமைத்துள்ளேன். நான் பிறந்த சொந்த கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்திருந்த நிலையில் இது எனக்கு மனநிறைவை தறுவதாகவும், பொது மக்களின் பாராட்டு மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், எங்கள் கிராம சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருந்த நிலையில் இளைஞர் சந்திரசேகரன் அவருடைய சொந்த பணத்தில் இருந்து இந்த சாலையை அமைத்துக்கொடுத்துள்ளார். இதனால் குழந்தைகள் விளையாடு மகிழ்கின்றனர் என தெரிவிக்கும் பொது மக்கள் இளைஞரின் செயலுக்கு தங்கள் பாராட்டை தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் : குணாநிதி ஆனந்தன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.