விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் பாஸ்தா சாப்பிட்டு உயிரிழந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து சம்மந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சார்ந்த பிரதிபா, விஜயகுமார் இருவரும் காதலித்து குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 13 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு, அன்னியூரில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நண்பர்களுடன் சுற்றுலா சென்று மாலை வீட்டிற்கு வரும்போது விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீ பார் என்ற உணவகத்தில் வொயிட் பாஸ்தா என்ற உணவினை வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார்.
இரவு பிரதிபா உணவு செரிக்காமல் வாந்தி எடுக்கவே, அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கணவர் விஜயகுமார் அனுமதித்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே பிரதிபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாஸ்டா
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் கஞ்சனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த பிரதிபாவுக்கு இதய அடைப்பு இருந்ததால் அவர் மாத்திரை எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே பிரதிபாவின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே, அவர் பாஸ்தா உணவு செரிக்காமல் உயிரிழந்தாரா அல்லது இதய பாதிப்பு காரணமாக உயிரிழந்தாரா என்பது தெரிர்யவரும்.

அதிகாரிகள் ஆய்வு
இந்நிலையில், பாஸ்தா சாப்பிட்டதால் பெண் உயிரிழந்ததாக சமூக வளைதளங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
Must Read : தமிழகத்தில் பணியாற்ற விருப்பமில்லையா.. ரூ.50 லட்சம் இழப்பீடு செலுத்துங்க - கேரள மருத்துவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அப்போது கடையில் இருந்த பாஸ்தா உணவை சமைத்து சாப்பிட்டு பார்த்தனர். தொடர்ந்து கடையில் இருந்த காலாவதியான உணவுகளை அதிகாரிகள் அழித்தனர். மேலும், உணவகத்தில் உள்ள பாஸ்தா உள்ளிட்ட உணவு பொருட்களை சோதனைக்காக அதிகாரிகள் எடுத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - ஆ.குணாநிதி, விழுப்புரம்.
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.