முகப்பு /செய்தி /விழுப்புரம் / ஃபேஸ்புக்கில் பழகி திருமணம்.. ஒரே மாதத்தில் பணம், நகையுடன் ஓட்டம் பிடித்த பெண்..

ஃபேஸ்புக்கில் பழகி திருமணம்.. ஒரே மாதத்தில் பணம், நகையுடன் ஓட்டம் பிடித்த பெண்..

இளைஞரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்

இளைஞரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்

Villuppuram News : மேல்மலையனூர் அருகே முகநூலில் பழகி திருமணம் செய்துக்கொண்ட பெண் நகை, பணத்துடன் மாயமானதாக ஏமாந்த இளைஞர் காவல்நிலையத்தில் புகார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகிலுள்ள சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் விவசாய கூலிவேலை செய்து வருகிறார். இருவருக்கு ஃபேஸ்புக் ( Facebook ) மூலமாக காரைக்கால் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். தன்னை அனாதை என அறிமுகம் செய்துக்கொண்ட மகாலட்சுமி கடந்த 3 மாதங்களாக மணிகண்டனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.  மணிகண்டன் தனது காதல் குறித்து தாயிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குடும்பத்தினரின் சம்மதத்துடன் காரைக்கால் சென்று மகாலட்சுமியை சொந்த ஊரான சிறுதலைப்பூண்டி கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 18ம் தேதி அவலூர்பேட்டை முல்லை நகரில் உள்ள அங்காளம்மன் கோயில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். ஒரு மாதம் மணிகண்டனுடன் குடும்பம் நடத்தி வந்த மகாலட்சுமி டிசம்பர் 11ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகை, ரூ.1,00,000 லட்சம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காரில் தப்பி சென்றுள்ளார்.

மணிகண்டன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகாலட்சுமியை காணவில்லை. இதனால் பல இடங்களில் அவரை தேடியுள்ளார். அப்போது மகாலட்சுமி காரில் சென்றதை பார்த்த கிராமத்தினர் இதுகுறித்து மணிகண்டனிடம் தெரிவித்தனர். இதையடுத்து, தொலைப்பேசியில் மகாலட்சுமியை மணிகண்டன் தொடர்புக்கொண்டுள்ளார். ஆனால் மகாலட்சுமி பதிலளிக்கவில்லை. சில நாட்களுக்கு பிறகு தொலைப்பேசியில் பேசிய மகாலட்சுமி வெவ்வேறு இடங்களில் இருப்பதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னை தேடி வந்தால் கொலை செய்துவிடுவதாக கூறி மணிகண்டனுக்கு மகாலட்சுமி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் நேற்று மாலை செஞ்சி காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வளத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகநூலில் பழகி திருமணம் செய்த பெண் ஒரு மாதம் குடும்பம் நடத்திவிட்டு நகை, பணத்துடன் இளைஞர் ஏமாற்றிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : குணாநிதி - விழுப்புரம்

First published:

Tags: Crime News, Local News, Villupuram