Home /News /viluppuram /

விழுப்புரம் அரசு கல்லூரியில் இறுதி கட்ட மாணவர் சேர்க்கை அறிவிப்பு.. எப்போ தெரியுமா?

விழுப்புரம் அரசு கல்லூரியில் இறுதி கட்ட மாணவர் சேர்க்கை அறிவிப்பு.. எப்போ தெரியுமா?

விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரி

விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரி

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதி கட்ட மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram | Tamil Nadu
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் மொழி பாடப்பிரிவுகளில் எஞ்சியுள்ள இடங்களை நிரப்புவதற்காக இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

இந்த கல்லூரியில் படிக்க, இணையதளம் மூலம் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டும் மாணவர் சேர்க்கையில் பதிவு செய்ய முடியும். அதன்படி 23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பி.எஸ்சி. அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

24ஆம் தேதி (சனிக்கிழமை) பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம். பாடப்பிரிவுகளுக்கும், 28ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு பி.எஸ்சி. அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கையும், 29ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பி.ஏ., பி.காம். பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

ALSO READ | விருதுநகரில் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா - பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் கொண்டாட்டம்

இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. எனவே, கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் அதனை பூர்த்தி செய்து சாதிச்சான்றிதழ் நகல், 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் ஆகியவற்றை இணைத்து கல்லூரியில் சமர்பிக்க வேண்டும்.

இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை விண்ணப்பம் பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள முடியும் என கல்லூரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Anupriyam K
First published:

Tags: College Admission, Local News, Viluppuram S22p13

அடுத்த செய்தி