முகப்பு /செய்தி /விழுப்புரம் / நகையை திருடி விட்டு வீட்டை கொளுத்தி சென்ற மர்மநபர்கள்.. விழுப்புரத்தில் பரபரப்பு!

நகையை திருடி விட்டு வீட்டை கொளுத்தி சென்ற மர்மநபர்கள்.. விழுப்புரத்தில் பரபரப்பு!

நகை கொள்ளை

நகை கொள்ளை

Viluppuram theft | ஆளில்லாத வீட்டை நோட்ட மிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அருகே ஆளில்லாத வீட்டில் 15 சவரன் நகையை திருடி சென்ற மர்மநபர்கள், தடயங்கள் கிடைக்காமல் இருக்க வீட்டை தீயிட்டு கொளுத்திவிட்டு சென்றுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஆஷிக் , பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார் . இவர் தினமும் பர்னிச்சர் கடையிலே தூங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து புகை வந்துள்ளதை கண்டு அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற ஆஷிக் உள்ளே சென்று பார்க்கும் போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்களில் இருந்து தீ வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து திண்டிவனம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயை அணைத்தனர்.

தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ  உடைக்கப்பட்டு அதிலிருந்து 15 சவரன் தங்க நகைகள், 11/2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கை ரேகைகளை சேகரித்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தடயங்கள் கிடைக்காமல் இருக்க மர்மநபர்கள் வீட்டை கொளுத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

செய்தியாளர்: ஆ.குணாநிதி,  விழுப்புரம்.

First published:

Tags: Local News, Theft, Villupuram, Viluppuram S22p13