ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

தோப்பில் உல்லாசம்.. கள்ளக்காதலனை விரட்டியடித்து பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர்கள்- விழுப்புரம் அருகே பயங்கரம்

தோப்பில் உல்லாசம்.. கள்ளக்காதலனை விரட்டியடித்து பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர்கள்- விழுப்புரம் அருகே பயங்கரம்

விழுப்புரம்

விழுப்புரம்

பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து இளைஞர்கள் மிரட்டியுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Viluppuram | Viluppuram | Tamil Nadu

  மரக்காணம் அருகே கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 3 மகள்களுடன் கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மேலும், அவர் கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

  இந்தநிலையில் அந்த பெண்ணுக்கும் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் மரக்காணம் அருகே உள்ள தைலமர தோப்பில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

  அப்போது அங்கு வந்த மரக்காணம் பகுதியை சேர்ந்த எழில்பரதன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்துள்ளனர். மேலும் கள்ளக்காதலனை கொன்று விடுவதாக மிரட்டி அவரை அங்கிருந்து அடித்து விரட்டியுள்ளனர். பின்னர் வீடியோவை காட்டி மிரட்டி தனியாக சிக்கிக்கொண்ட அந்த பெண்ணை எழில்பரதனும், அவரது நண்பரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனையும் செல்போனில் வீடியோ எடுத்து, இந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும் உனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

  இதனால் பயந்துபோன அந்த பெண், தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் கூறவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி, எழில்பரதன் மற்றும் அவரது நண்பர் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி, அந்த பெண்ணை அடிக்கடி தனியாக வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

  ALSO READ | திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திகுத்து.. கள்ளக்காதலன் வெறிச்செயல்

  இந்தநிலையில் நாளுக்குநாள் அவர்களின் தொல்லை அதிகரிக்கவே, வாழ்வதை விட சாவதே மேல் என்று அந்த பெண் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். ஆனால் 3 மகள்களின் கதி என்ன ஆகும் என நினைத்து அந்த முடிவை கைவிட்டுள்ளார்.இந்த நிலையில் அந்த பெண் பணம் தராததால், அவரை மிரட்டும் வகையில் பெண்ணின் ஆபாச வீடியோ ஒன்றை வாட்ஸ் குழுக்களில் எழில்பரதன் பதிவிட்டுள்ளார். இதை அறிந்த அந்த பெண் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் எழில்பரதன் மற்றும் அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

  செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Illegal affair, Viluppuram S22p13