ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவர்.. விழுப்புரத்தில் பயங்கரம்!

தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவர்.. விழுப்புரத்தில் பயங்கரம்!

ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவர்

ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவர்

மாணவன் 17 வயதுடைய சிறார் என்பதால் மேல் விசாரணைக்காக விழுப்புரம் மாவட்ட இளம் சிறார் நீதிக் குழுமத்திற்கு பரிந்துரை.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Viluppuram | Viluppuram

  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. மாணவ, மாணவிகள் என இருபாலரும் பயிலக்கூடிய இந்த பள்ளியில் கண்டமங்கலத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

  இந்நிலையில் இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் அடிக்கடி சக மாணவிகளை தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்ததாகவும், இதனை அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான சேவியர் சந்திரகுமார் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

  இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பள்ளியில் இருந்த சக மாணவிகளை கேலி, கிண்டல் செய்த மாணவரை தனது அறைக்கு அழைத்து தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமார் கண்டித்துள்ளார்.

  இதனால் ஆத்திரமடைந்த மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமாரின் தலையில் பலமாக தாக்கினான்.

  இதில் தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனையடுத்து படுகாயம் அடைந்த தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமார். அருகில் உள்ள அரியூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த இச்சம்பவம் தொடர்பாக கண்டமங்கலம் அரசு பள்ளியிலும், 12ஆம் வகுப்பு மாணவன் மற்றும் அவனது பெற்றோரிடமும் விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கையை வழங்கினர்.

  ALSO READ | முதியவரை 100 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற டெம்போ ட்ராவலர்! - நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

  இதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியரை தாக்கிய 12ஆம் வகுப்பு மாணவனை ஒரு வாரத்திற்கு பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா உத்தரவிட்டுள்ளார்.

  இதனிடையே தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமார் அளித்த புகாரின் பேரில் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியது. மாணவிகளை கேலி செய்தது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் மாணவன் விக்னேஷ் மீது கண்டமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  மாணவன் 17 வயதுடைய சிறார் என்பதால் மேல் விசாரணைக்காக விழுப்புரம் மாவட்ட இளம் சிறார் நீதிக் குழுமத்திற்கு கண்டமங்கலம் காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

  செய்தியாளர்: குணாநிதி ஆனந்தன், விழுப்புரம்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, School student, Viluppuram S22p13