முகப்பு /செய்தி /விழுப்புரம் / “உன் கல்யாணத்துக்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கிஃப்ட்..!” - மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான அன்பளிப்பு

“உன் கல்யாணத்துக்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கிஃப்ட்..!” - மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான அன்பளிப்பு

கல்யாண பரிசு

கல்யாண பரிசு

Villupuram Marraige Gift : விழுப்புரத்தில் கல்யாண மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த திருமண பரிசு வீடியோ இணையத்தில் வைரல்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நண்பரின் திருமணத்திற்கு வித்தியாசமான முறையில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டு வடிவில் புகைப்படம் அன்பளிப்பு வழங்கிய நண்பர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தை சேர்ந்த சேகர்-அமுதா தம்பதி. இவர்களின் மகன் ராஜாவுக்கும் மேவளூர்குப்பம் கிராமத்தை சேர்ந்த செளமியா என்பவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணமான செஞ்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருமணத்துக்கு ப்ளக்ஸ் பேனர் என அமர்களப்படுத்திய நண்பர்கள் திருமண பரிசை வித்தியாசமாக கொடுக்க நினைத்துள்ளனர்.   புதுமண தம்பதிகளை குடும்ப அட்டை வடிவில் புகைப்படமாகவும் நண்பர்களை ஆதார் கார்டு வடிவில் புகைப்படம் இணைத்து வித்தியாசமான முறையில் அன்பளிப்பாக வழங்கி மணமக்களை வாழ்த்திய நிகழ்வு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தது.

குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை வடிவில் அன்பளிப்பு வழங்கப்பட்ட அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 

செய்தியாளர்: ஆ.குணாநிதி (விழுப்புரம்)             

First published:

Tags: Local News, Tamil News, Villupuram, Viral Video