முகப்பு /செய்தி /விழுப்புரம் / விழுப்புரம் காதலனுடன் இருந்த சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைப்பு

விழுப்புரம் காதலனுடன் இருந்த சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைப்பு

கூட்டு பாலியல் வன்புணர்வு

கூட்டு பாலியல் வன்புணர்வு

vikaravandi gang rape case | செங்கமேடு ஏரிக்கரைக்கு சென்று பேசி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே காதலனை கத்தியால் குத்தி விட்டு 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பயங்கரம் சம்பவத்தில் 8 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், அய்யங்கோயில்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், சிந்தாமணியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுவனும், சிறுமியும் நேற்று இரவு விக்கிரவாண்டி அருகே உள்ள செங்கமேடு ஏரிக்கரைக்கு சென்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.

மேலும் சிறுவனை கத்தியால் குத்திவிட்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடினர். கத்தி குத்தில் படுகாயமடைந்த சிறுவனும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியும் தற்போது முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயங்கர சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் 8 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: குணநிதி ஆனந்தன்

First published:

Tags: Crime News, Local News, Villupuram