முகப்பு /செய்தி /விழுப்புரம் / விழுப்புரம் வீடுர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

விழுப்புரம் வீடுர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

வீடுர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

வீடுர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Villupuram Veedur Dam | விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து பிரதான கால்வாய் வழியே பாசனத்திற்காக 150கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் மோகன் திறந்து வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் விக்கிராவாண்டி அடுத்துள்ள வீடுர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த வடகிழக்கு பருவமழையின் போது பரவலாக மழை பெய்ததன் காரணமாகவும் மேலும் விக்ரவாண்டி, செஞ்சி, ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அதனை தொடர்ந்து அனை அதன் முழு கொள்ளளவான 32 அடியை எட்டியது.

இந்நிலையில் இன்று விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து பிரதான கால்வாய் வழியே பாசனத்திற்காக 150கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் மோகன் திறந்து வைத்தார்.  இதன் மூலம் வீடுர், சிறுவை, பொம்பூர், பொன்னம்பூண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2500 ஏக்கர் விளைநிலங்களும் மேலும் புதுச்சேரி மாநிலத்தில் ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 3,500 ஏக்கர் விளைநிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறும்.

செய்தியாளர்: ஆ.குணாநிதி      

First published:

Tags: Local News, Tamil News, Villupuram