Home /News /viluppuram /

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட எல்லீஸ்சத்திரம் அணை வெடிவைத்து தகர்ப்பு...

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட எல்லீஸ்சத்திரம் அணை வெடிவைத்து தகர்ப்பு...

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட அணை வெடிவைத்து தகர்ப்பு...

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட அணை வெடிவைத்து தகர்ப்பு...

Viluppuram | விழுப்புரம் அடுத்துள்ள ஏனாதிமங்கலம் பகுதியில்  தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட எல்லீஸ் அணைக்கட்டு வெடிவைத்து தகர்க்கப்பட்டது. ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரைகள் அரிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 72 ஆண்டுகளுக்கு முன்பு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டின் மூலம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 20,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி வழங்கி வருவதோடு, விழுப்புரம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50 கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கடந்த ஆண்டு தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உடைந்து சேதமடைந்தது. அத்துடன் அதன் அருகே உள்ள கரைப்பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டது. தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கரைப்பகுதிகளில் தொடர்ந்து கடும் அரிப்பு ஏற்பட்டு கரையோரம் உள்ள மண் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்து வந்தது.

    இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஏனாதிமங்கலம், எரளூர், கரடிப்பாக்கம், குச்சிப்பாளையம், மேலமங்கலம், செம்மார் உள்ளிட்ட 7 கிராமங்களுக்குள் எந்த நேரத்திலும் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டது. மேலும் ஏனாதிமங்கலம் -விழுப்புரம் இடையேயான சாலை துண்டிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் கருங்கற்கலை கொட்டி தற்காலிகமாக மண் அரிப்பு தடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மேலும் மண் அரிப்பை தடுக்கவும், தண்ணீரை வேகமாக வெளியேற்றவும் தடுப்பனையின் நடுவில் உள்ள இரும்பு கட்டைகளை பொதுப்பணித்துறை ஊழியர்களால் உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் தண்ணீர் போக்கை மாற்ற அணைக்கட்டின் நடுப்பகுதில் 50 மீட்டர் தூரத்திற்கு வெடி வைத்து தகர்க்கப்பட்டது.



    Also see.... பைக் திருடி பிரித்து விற்பனை... சிசிடிவியால் சிக்கிய திருடன்..

    இதனால் மண் அரிப்பு ஏற்படும் கரைக்கு தண்ணீர் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. வெடி வைத்து தடுப்பை உடைக்கப்பட்டதால் தற்போது தண்னீர் வேகமாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
     
    செய்தியாளார்: ஆ.குணாநிதி, விழுப்புரம்   
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Flood, Villupuram

    அடுத்த செய்தி