முகப்பு /செய்தி /விழுப்புரம் / நிலத்தகராறில் பாமக பிரமுகர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டாரா? - தனிப்படை அமைத்து போலீஸ் தீவிர விசாரணை

நிலத்தகராறில் பாமக பிரமுகர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டாரா? - தனிப்படை அமைத்து போலீஸ் தீவிர விசாரணை

கொலை செய்யப்பட்ட பாமக பிரமுகர் ஆதித்யன்

கொலை செய்யப்பட்ட பாமக பிரமுகர் ஆதித்யன்

Villupuram News: விக்கிரவாண்டி அருகே பாமக பிரமுகர் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூரைச் சேர்ந்தவர் ஆதித்யன்(50). இவர் விழுப்புரம் மத்திய மாவட்ட பாமக துணைச் செயலாளராகவும், அரசு ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நள்ளிரவு, விக்கிரவாண்டியில் இருந்து கப்பியாம்புலியூரில் உள்ள தனது வீட்டிற்கு இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆதித்யனை, கப்பியாம்பூலியூர் அருகே திடீரென வழி மடக்கிய மர்ம கும்பல் ஒன்று கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டது.

இதில் உடல் முழுவதும் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாமக பிரமுகர் ஆதித்யன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்ததும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து உயிரிழந்த ஆதித்யனின் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க விழுப்புரம் உட்கோட்ட காவல்துணை கண்கானிப்பாளர் பார்த்திபன் தலைமையில் 4 தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பல ஆண்களுடன் தொடர்பு.. மருமகன் உதவியுடன் மகளை கொன்ற தாய் - 3 மாதத்துக்கு பின் சிக்கியது எப்படி?

காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் உறவினர்களுக்குள் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாகவே இந்த கொலை நடைபெற்று இருப்பதாக தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து விக்கிரவாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

top videos

    செய்தியாளர்: குணாநிதி  (விழுப்புரம்)

    First published:

    Tags: Crime News, Local News, PMK, Villupuram