ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

பைக்கில் பட்டாசு வெடித்து சாசகம்... வைரலான வீடியோ.. 2 பேரை தேடிவரும் போலீஸ்

பைக்கில் பட்டாசு வெடித்து சாசகம்... வைரலான வீடியோ.. 2 பேரை தேடிவரும் போலீஸ்

ஓடும் பைக்கில் பட்டாசு வெடித்த இளைஞர்

ஓடும் பைக்கில் பட்டாசு வெடித்த இளைஞர்

பைக்கில் சென்றுகொண்டே பட்டாசு வெடித்த வீடியோ வைரலான நிலையில் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Viluppuram, India

  விழுப்புரத்தில், தீபாவளி அன்று இளைஞர் ஒருவர் பைக்கில் உட்கார்ந்தபடி பட்டாசு வெடித்துக்கொண்டே சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாகனத்தின் பின்னால் அமர்ந்திருக்கும் இளைஞர், கையில் பட்டாசை வெடித்தபடி பயணத்தைத் தொடர்கிறார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், 2 இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

  தீபாவளித் நாளன்று, விழுப்புரத்தில் உள்ள முக்கியச் சாலைகள் வழியாக, இளைஞர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, அந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞர் ஒருவர் தனது கையில் வானத்தில் சென்று வெடிக்கும் பட்டாசு பெட்டியை கையில் வைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

  அப்போது ஒவ்வொரு பட்டாசாக வெடித்தவாறு சென்றுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர்கள் யார், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.
   
  View this post on Instagram

   

  A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)  இருப்பினும், அந்த இளைஞர்கள் யார் என்பது குறித்து விழுப்புரம் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு விதித்த உத்தரை மீறி பொது மக்களுக்கு அச்சுருத்தல் ஏற்படுத்தும் விதமாக இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபடி பட்டாசு வெடித்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Crackers, Deepavali, Villupuram