முகப்பு /செய்தி /விழுப்புரம் / 50 மின் மோட்டார்கள்.. ரூ.8 லட்சம் மதிப்பு - செஞ்சியில் தொடரும் திருட்டு அதிர்ச்சியில் விவசாயிகள்

50 மின் மோட்டார்கள்.. ரூ.8 லட்சம் மதிப்பு - செஞ்சியில் தொடரும் திருட்டு அதிர்ச்சியில் விவசாயிகள்

காவல்நிலையத்தில் புகார் அளித்த கொங்கரப்பட்டு கிராம மக்கள்

காவல்நிலையத்தில் புகார் அளித்த கொங்கரப்பட்டு கிராம மக்கள்

Villupuram Gingee Motors Theft | தொடர் மோட்டர் திருட்டு சம்பவத்தை அடுத்து 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரே நேரத்தில் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

செஞ்சி அருகே கடந்த 4 மாதத்தில் விவசாய நிலங்களில் இருந்த சுமார் 8 லட்சம் மதிப்புள்ள 50 மின் மோட்டர்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தில் விவசாய நிலத்தில் மின் மோட்டர்களை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் திருடிச் செல்வது தொடர் கதையாக உள்ளது. இதுவரை கொங்கரப்பட்டு கிராமத்தில் மட்டும் 30 மின்மோட்டர்கள் திருடப்பட்டு உள்ளது. இதேபோல் மணியம்பட்டு கிராமத்திலும் 20-க்கும் மேற்பட்ட மின் மோட்டர்கள் திருடப்பட்டுள்ளதாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது.

புகார் அளித்தும் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்காததால் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. கடந்த 4 மாதத்தில் மட்டும் விவசாய நிலத்தில் இருந்த சுமார் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 50 மின் மோட்டர்கள் திருடப்பட்ட சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று இரவு கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான தர்மராஜா மற்றும் அருள்ஜோதி ஆகியோர் நிலத்தில் இருந்த சுமார் 40,000 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு மின்மோட்டர்களையும் மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் மோட்டர் திருட்டு சம்பவத்தை அடுத்து 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரே நேரத்தில் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மின் மோட்டர்கள் தொடர்ச்சியாக திருடப்படுவது குறித்து செஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் செஞ்சி காவல்துறையினர்,கொங்கரப்பட்டு மணியம்பட்டு பகுதியில் இரவு நேரங்களில் ரோந்து வருவதில்லை எனவும் இதனால் தான் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

செய்தியாளர்: ஆ.குணாநிதி    

First published:

Tags: Crime News, Local News, Villupuram