முகப்பு /செய்தி /விழுப்புரம் / அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்தது என்ன? 8 பேரிடம் நடக்கவுள்ள விசாரணை.. வெளிவருமா உண்மைகள்?

அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்தது என்ன? 8 பேரிடம் நடக்கவுள்ள விசாரணை.. வெளிவருமா உண்மைகள்?

அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் மேலும் 4 பேர் கைது

அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் மேலும் 4 பேர் கைது

Villupuram Anbu Jothi Ashram | கடந்த 10-ம் தேதி ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி உட்பட 8 பேரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா என்பவர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10-ம் தேதி ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். ஆசிரமத்தில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையர் நேரில் விசாரணை நடத்தி அங்கு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி, 8 பேரையும் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். இதனையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

செய்தியாளர்: குணநிதி ஆனந்தன்

First published:

Tags: Crime News, Local News, Villupuram