ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

’ஸ்கூலுக்கு போகமாட்டேன் என்ன விடுங்க..’ கதறிய சிறுவனை தரதரவென இழுத்து சென்று பள்ளியில் விட்ட தாய்..!

’ஸ்கூலுக்கு போகமாட்டேன் என்ன விடுங்க..’ கதறிய சிறுவனை தரதரவென இழுத்து சென்று பள்ளியில் விட்ட தாய்..!

விழுப்புரம் வைரல் வீடியோ

விழுப்புரம் வைரல் வீடியோ

தாயின் கைபிடியில் இருந்து தப்பித்து ஓடிய சிறுவனை அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, தூக்கி சென்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Viluppuram | Viluppuram

  விழுப்புரத்தில் ஸ்கூலுக்கு போகமாட்டேன் என கதறிய சிறுவனை தரதரவென இழுத்து சென்று பள்ளியில் கொண்டு சேர்த்த தாயின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருவதால், ஆங்காங்கே மழை நீடித்து வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மழையின் காரணமாக இரண்டு நாள் விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கப்பட்டது.

  இந்நிலையில் விழுப்புரம் அருகே ஏமப்பூர் கிராமத்தை சேர்ந்த 4ஆம் வகுப்பு மாணவன் ஒருவர், பள்ளிக்கு செல்ல மறுத்து சாலையிலேயே அடம்பிடித்துள்ளார். இதனை கண்ட அவரது தாய் சிறுவனின் கையை பிடித்து தரதரவென பள்ளிக்கு இழுத்து சென்றுள்ளார்.

  ஆனாலும் தாயின் கைபிடியில் இருந்து தப்பித்து ஓடிய சிறுவனை அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, தூக்கி சென்று பள்ளியில் கொண்டு சேர்த்தனர். அப்போது அந்த சிறுவன் என்னை விடுங்கள் என கதறி அழுத வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Villupuram, Viluppuram S22p13, Viral Video