Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

தமிழ்நாடு தவறில்லை.. வரலாறு தெரியாத ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும் -அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு தவறில்லை.. வரலாறு தெரியாத ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும் -அமைச்சர் பொன்முடி

பொன்முடி

பொன்முடி

Tamilnadu : தமிழக அரசு என்ன செய்கிறதோ அதை நியமன பதவியிலுள்ள ஆளுநர் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதை அன்போடு கேட்டுக்கொள்வதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

ஆளுநர் ரவி தமிழகம் என அழைக்க வேண்டும் என கூறியுள்ளார். வரலாறு தெரியாத ஆளுநர் ரவி இதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகிலுள்ள வேம்பி மற்றும் கஞ்சனூர் ஆகிய பகுதிகளில் அங்கவாடி மையம் மற்றும் ஆய்வகத்தினை திறந்து வைத்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாடு என்பது சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கூறப்படும் கருத்து. அது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவின் அரசியலமைப்பிலேயே தமிழ்நாடு என்றே உள்ளது.

அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தின் போதே கூட்டாட்சியா, ஒற்றை ஆட்சியா என்ற  விவாதம் எழுந்த போது அம்பேத்கர் யூனியன் ஆப் ஸ்டேட் என்று கொண்டு வந்தார். அந்த  அடிப்படையில் தான் யூனியன் ஆப் ஸ்டேட் என்பதை கூறுகிறோம். ஸ்டேட் என்றால் நாடு, யூனியன் என்றால் ஒன்றியம் அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு என்று கூறுகிறோம்.

அரசியலமைப்பின்படி செயல்படுகிற ஒரு முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் எந்த வேறுபட்ட கருத்துமில்லை. அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு என்கிறோம். அதில் எந்த தவறும் இல்லை அது தான் உண்மையான கருத்து. ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை அவர் பல்வேறு நிகழ்வுகளில் இப்படித்தான் பேசி வருகிறார்.

தமிழ்நாடு என்பது சரியான வார்த்தை அதில் எந்த தவறுமில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கருத்து. மகாராஷ்டிராவில் ராஷ்டிரா என்றால் நாடு என்று அர்த்தம். ஏதோ ஒரு காரணத்திற்கான ஆளுநர் அப்படி சொல்லியிருக்கிறார். ஆளுநர் இதனை மாற்றிக்கொள்ள வேண்டும்.  ஜன கண மன என்ற தேசியகீத பாடலில் திராவிடம் என்ற சொல் வந்துள்ளது. அந்த அடிப்படையில் தான் தமிழக முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். ஆளுநரை வேண்டி கேட்டுக்கொள்வது என்னவென்றால் தமிழக அரசு என்ன செய்கிறதோ அதை நியமன பதவியிலுள்ள ஆளுநர் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதை அன்போடு கேட்டுக்கொள்வதாக கூறினார்.

செய்தியாளர்: ஆ.குணாநிதி (விழுப்புரம்)

First published:

Tags: Minister Ponmudi, Tamil Nadu Governor, Tamil News, Tamilnadu, Villupuram