விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வெளியனூர் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான சரவணன்(19) என்பவர் தனது நண்பருடன் கடந்த 10ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திண்டிவனம் அருகே உள்ள விளங்கம்பாடி என்ற இடத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் சரவணனுடன் சென்ற அவரது நண்பர் சிபி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கல்லூரி மாணவர் சரவணன் படுகாயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கல்லூரி மாணவர் சரவணன் மூளைச்சாவு அடைந்தார்.
இதனையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர் சரவணனின் உடல் உறுப்புகளான இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவைகள் தானமாக வழங்கப்பட்டது.
இதனையடுத்து தானமாக வழங்கப்பட்ட கல்லூரி மாணவர் சரவணனின் உடல் உறுப்புகள் சென்னை, கேரளாவிற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக சென்னை, கேரளா செல்லும் வழிகளில் போலீசாரால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு இடையூறு ஏற்படாமல் பார்த்து கொள்ளப்பட்டது. இதன் காரணமாக கல்லூரி மாணவர் சரவணனின் உடல் உறுப்புகள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு தங்கு தடையின்றி சென்னை, கேரளாவிற்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டது.
Also see...முகநூல் காதலியை தேடி சென்ற இளைஞர் மாயம்
சென்னையில் ஒரு நாள் படத்தில் வருவது போல கல்லூரி மாணவர் சரவணனின் உடல் உறுப்புகளால் தற்போது 4 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala, Organ donation, Road accident