Home /News /viluppuram /

மதுகுடிக்க பணம் தராததால் கல்லைப்போட்டு தாயை கொன்ற மகன்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

மதுகுடிக்க பணம் தராததால் கல்லைப்போட்டு தாயை கொன்ற மகன்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

தாய் - மகன்

தாய் - மகன்

Viluppuram |குடிக்க பணம் தர மறுத்த தாயை மகனே தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலூள்ள எஸ்.எஸ்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மனைவி பாஞ்சாலி(70). இவர்களுடைய மகன் விஜயகுமார்(42). டிராக்டர் ஓட்டுனராக உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தாய் பாஞ்சாலியிடம் சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மது போதையில் வீட்டிற்கு வந்த விஜயகுமார் மது குடிப்பதற்கு தாய் பாஞ்சாலியிடம் பணம் கேட்டுள்ளார்.

    தாய் பாஞ்சாலி பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஜயகுமார் அருகில் இருந்த கட்டையால் தாய் பாஞ்சாலியை தாக்கியதுடன் அருகில் இருந்த  கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளார். அதில் தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பாஞ்சாலி துடிதுடித்து உயிரிழந்தார்.

    உடனடியாக அருகிலிருந்தவர்கள் விக்கிரவாண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததுடன் அங்கிருந்து தப்பிக்க முயன்ற விஜயகுமாரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொலை செய்யபட்ட பாஞ்சாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Also see...திருமணநாளில் தலைமறைவான இளம்பெண் கழுத்தறுத்து கொலை - திடுக்கிடும் தகவல்

    மேலும் விஜயகுமாரை கைது செய்த விக்கிரவாண்டி காவல்துறையினர் விசாரனைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். குடிக்க பணம் தர மறுத்த தாயை மகனே தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: குணாநிதி, விழுப்புரம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Mother, Murder, Villupuram

    அடுத்த செய்தி