Home /News /viluppuram /

அராஜகத்தின் கையில் சிக்கிக் கொண்டு அதிமுக அல்லல்பட்டு வருகிறது - சசிகலா

அராஜகத்தின் கையில் சிக்கிக் கொண்டு அதிமுக அல்லல்பட்டு வருகிறது - சசிகலா

சசிகலா

சசிகலா

Sasikala : உரிய நேரத்தில் தொண்டர்களின் ஆதரவோடு அதிமுக கட்சி அலுவலகம் செல்வேன். கட்சியை மீட்க செய்ய வேண்டியதை தொடர்ந்து செய்து வருகிறேன் என சசிகலா கூறியுள்ளர்.

    அதிமுக பசுந்தோல் போர்த்திய புலியிடம் சிக்கி, உடமைகளை இழந்து அராஜகத்தின் கையில் சிக்கி அல்லப்படுகிறது என விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் புரட்சிப்பயனத்தில் ஈடுபட்ட சசிகலா கூறினார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் புரட்சி பயனம் மேற்கொண்டுள்ள சசிக்கலா திண்டிவனத்தில் தொடங்கி மரக்காணத்தில் பயணத்தை நிறைவு செய்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மக்களை சந்தித்த சிக்கலா பொது மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் நடைபெறும் சோதனைகளை பார்க்கும்போது எனக்கு வேதனையாக உள்ளது என்று கூறினார்.

    எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியில் கட்சியின் பொதுச்செயலாளரை அடிமட்ட தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தனித்துவமான விதியை உருவாக்கினார் என்றும், ஆனால் இன்று பசுந்தோல் போர்த்திய புலியிடம் சிக்கியது போல் உள்ளது. இன்று அதிமுக உடமைகளை இழந்து அராஜகத்தின் கையில் சிக்கி அல்லப்படுவதாக பேசினார்.

    அதிமுக தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழலில் உள்ளனர். சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்துவிட்டனர். ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்படி கட்சியின் சட்டத்திருத்தை மேற்கொள்ள யாருக்கும் அதிகாரம் இல்லை.

    எம்.ஜிஆர். கொண்டு வந்த சட்டத்திடங்களை மாற்ற எந்த அடிமட்ட தொண்டரும் விரும்பவில்லை. இந்தனை புரிந்துக்கொண்டு அனைவரும் ஒன்றியனை வேண்டும். திமுகவினருக்கு  நாமே இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நான் பொருமையாக உள்ளேன். அதிமுகவை அடிமட்ட தொடர்களாலானது அதனை அழித்துவிட முடியாது. அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. என குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து முருகேரி பகுதியில் பொது மக்கள் மத்தியில் உரையாற்றிய சசிக்கலா. பின்னர் செய்தியாளர்களிடம் பேசியனார். அப்போது, தற்போது அதிமுகவில் நடப்பது பொதுக்குழுவே இல்லை. ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, இதற்கு கழக தொண்டர்கள், பொது மக்கள் பதில் சொல்வார்கள்.

    அமமுக, அதிமுக எல்லாமே எனக்கு ஒன்றுதான்.  உரிய நேரத்தில் தொண்டர்களின் ஆதரவோடு கட்சி அலுவலகம் செல்வேன். கட்சியை மீட்க செய்ய வேண்டியதை தொடர்ந்து செய்து வருகிறேன். எம்.ஜி,ஆர், ஜெயலலிதா வழியில் கட்சியை நடத்த வேண்டும் என்பதுதான் என் ஆசை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஜெயலலிதாவின் மரனம் தொடர்பான விசாரனை, கொடநாடு பிரச்சனையில் என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கொடநாடு வழக்கில் என்னிடம் காவல்துறை நடத்திய விசாரனையில் முறையாக பதில் அளித்துள்ளேன். தமிழ்நாடு அரசு கொடநாடு வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் சொந்தம் கொண்டாட அதிமுக நிறுவனம் இல்லை என கூறினார்.

    Must Read : உச்ச நீதிமன்ற வாயிலில் அ.தி.மு.க உட்கட்சி விவகாரம்: ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் முன்பிருக்கும் வாய்ப்புகள் என்ன?

    தொடர்ந்து பெருமுக்கள், பிரம்மதேசம், ஆலங்குப்பம், முருக்கேரி, கந்தாடு உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களை சந்திந்தத சசிக்கலா இறுதியாக மரக்காணத்தில் பயனத்தை நிறைவு செய்தார்.

    செய்தியாளர் - ஆ.குணாநிதி, விழுப்புரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Sasikala, Villupuram

    அடுத்த செய்தி