ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

செம்மரம், சந்தனமரம் வளர்க்க விருப்பமா? இதோ அரசே மரக்கன்று தருதாம்..! விழுப்புரத்தில் அடித்த ஜாக்பாட்!

செம்மரம், சந்தனமரம் வளர்க்க விருப்பமா? இதோ அரசே மரக்கன்று தருதாம்..! விழுப்புரத்தில் அடித்த ஜாக்பாட்!

செம்மரம்

செம்மரம்

ஒரு ஹெக்டேருக்கு 160 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 320 மரக்கன்றுகள் முழு மானிய விலையில் வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram | Tamil Nadu

விவசாய உற்பத்தியைப் பெருக்கிட அரசு சார்பில் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக கூறிய, விழுப்புரம் வேளாண் மற்றும் உழவர்நலத்துறை துறை இணை இயக்குனர் சந்தனம், செம்மரம், மருதம் போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய, விழுப்புரம் மாவட்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) பெரியசாமி, விழுப்புரம் மாவட்டத்தில் 75 விழுக்காடு மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 4,00,377 ஹெக்டேரில், 1.98 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பாகக் கொண்டுள்ளது.

இதில் 81,439 ஹெக்டேர் பரப்பளவில் ஒருமுறைக்கு மேல் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் விளங்குகின்றன. இந்த மாவட்டத்தின் பிரதான பயிர் நெல். சொர்ணாவாரி, சம்பா மற்றும் நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் நெல் பயிரிடப்படுகிறது.

மொத்த பயிர் சாகுபடி பரப்பில் 40 சதவீதம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல்லுக்கு அடுத்தபடியாக பயறு வகைகள் இம்மாவட்டத்தில் முக்கிய உணவுதானிய பயிராக விளங்குகிறது. வேளாண் உற்பத்தியில், விழுப்புரம் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக விளங்குகிறது.

Also read | ஆயுதபூஜைக்கான பொருட்களை வாங்க குவிந்த மக்கள்.. விழுப்புரம் நகர வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்.. 

விவசாய உற்பத்தியை உயர்த்த வேண்டி பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியும், அதன் தொடர்புடைய தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தும் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான சவாலை விவசாயத்துறை திறமையாக எதிர்கொள்கிறது.

மேலும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு வகையான மத்திய மற்றும் மாநிலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்ற அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களான துாயமல்லி, செங்கல்பட்டு சிறுமணி ஏக்கருக்கு 20 கிலோ வீதம் 50 சதவீத மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ALSO READ | விழுப்புரத்தில் ஒரு தாஜ்மஹால்..!! 

நெற் பயிரில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்திட நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு துத்தநாக சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ வீதமும், ஜிப்சம் ஏக்கருக்கு 200 கிலோ வீதமும் 50 சதவீத மானிய விலையில் 7 ஆயிரத்து 280 ஏக்கருக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தின் கீழ் விவசாய நிலங்களில் நடவு செய்ய சந்தனம், செம்மரம், மருதம், மகோகனி, ஈட்டி போன்ற மரக்கன்றுகள் வரப்புகளில் நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு 160 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 320 மரக்கன்றுகள் முழு மானிய விலையில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Published by:Anupriyam K
First published:

Tags: Viluppuram S22p13