செஞ்சி அருகே ஊராட்சி மன்ற தலைவரின் மண் திருட்டு குறித்து சுவரொட்டி ஒட்டிய சமூக ஆர்வலர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மீனம்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் முன்வர்பாஷா. திமுக பிரமுகரான இவர் ஏரியில் மண் திருட்டில் ஈடுபடுவதாக கூறி செஞ்சி பகுதி முழுவதும் ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
இது குறித்து மீனம்பூர் கிராமத்திற்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றபோது திமுக ஊராட்சி மன்ற தலைவர் முன்வர்பாஷா மற்றும் அவருடைய மகன் லியாகத் அலி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் ஏரி மண் கொள்ளை குறித்து பேட்டி கொடுக்க முன் வந்தவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
அப்போது அதனை வீடியோ பதிவு செய்ய முற்பட்டபோது செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து செய்தி சேகரிக்க விடாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பெறும் பரபரப்பு காணப்பட்டது.
மணல் திருட்டு - சமூக ஆர்வலர் மீது தாக்குதல்#DMK #sandtheft pic.twitter.com/ZNXlBRMYep
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 18, 2022
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Villupuram, Viluppuram S22p13