ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் தனியார் பேருந்து மோதி ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

விழுப்புரத்தில் தனியார் பேருந்து மோதி ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

சாலை விபத்து

சாலை விபத்து

Viluppuram | விழுப்புரம் அருகே நடைபயிற்சிக்கு சென்ற ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனர் தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் கண்டியை பொது மக்கள் அடித்து  நெருக்கினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Viluppuram, India

  விழுப்புரம் அருகில் உள்ள கோலியனூர் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(65) அரசு பேருந்து ஓட்டுனராக இருந்து ஓய்வு பெற்றவர். தட்சிணாமூர்த்தி இன்று காலை வழக்கம் போல வீட்டிற்கு அருகில் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்றவர் மீது கடலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதனால் அங்கு ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வளவனூர் காவல்துறையினர் தட்சிணாமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள வளவனூர் காவல்துறையினர் பேருந்தை காவல்நிலையம் எடுத்து சென்றனர்.  விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Also see... சம்பள பணம் அனுப்பியதில் தகராறு.. பீகார் தொழிலாளி படுகொலை - மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்

  விழுப்புரம்-புதுச்சேரி மற்றும் விழுப்புரம்-கடலூர் ஆகிய மார்க்கங்களில் இயக்கப்படும் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் தொடர் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

  செய்தியாளர்: ஆ.குணாநிதி,  விழுப்புரம் 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Government, Road accident, Villupuram