ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

திராவிட மாடலா? தமிழ் மாடலா? முதல்வருடன் விவாதிக்க நான் ரெடி - அண்ணாமலை சவால்

திராவிட மாடலா? தமிழ் மாடலா? முதல்வருடன் விவாதிக்க நான் ரெடி - அண்ணாமலை சவால்

அண்ணாமலை, மு.க.ஸ்டாலின்

அண்ணாமலை, மு.க.ஸ்டாலின்

தமிழ் மாடலா இல்லை திராவிட மாடலா என்பது குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம். திராவிடம் என்றால் என்ன என்பது குறித்தும், திமுகவின் 70 ஆண்டுகளாக சாதனையாக கூறப்படும் திராவிட மாடல் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளோம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Viluppuram, India

  திராவிட மாடலா, தமிழ் மாடலா என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள கூட்டேரிப்பட்டில், கடந்த 20 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கவர்னர் என்ன கருத்து தெரிவித்தாலும் அது அவருடைய கருத்து எனவும் பாஜக தலைவர் என்ற முறையில் மட்டுமே தான் கருத்து தெரிவிக்க முடியும்.

  தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் பெருமளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்திய அரசின் பல திட்டங்கள் தமிழ்நாட்டில் தடுக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்தியாவில் காப்பர் விலை இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டது. தற்போது சீனாவில் இருந்து இருக்குமதி செய்யும் நிலைக்கு வந்துவிட்டோம் என தெரிவித்தார்.

  இதையும் வாசிக்க: ''மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் நல்லெண்ணம் கொண்டவர்'' முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

  வரலாறு குறித்து விவாதிக்க தயாரா என அமைச்சர் பொன்முடி பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழ் மாடலா இல்லை திராவிட மாடலா என்பது குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம். திராவிடம் என்றால் என்ன என்பது குறித்தும், திமுகவின் 70 ஆண்டுகளாக சாதனையாக கூறப்படும் திராவிட மாடல் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

  மேலும், அமைச்சர் பொன்முடி ஒன்றும் கட்சி தலைவர் இல்லை இருப்பினும் அவர் நேரத்தையும், காலத்தையும் குறித்து சொன்னால் அது குறித்து விவாதிக்க பாஜக மாநில துணை தலைவர்களில் ஒருவரை அனுப்புகிறோம் என தெரிவித்தார். அதே போல் திமுக தலைவர் ஸ்டாலின் எப்போது தயார் என்றாலும் நேரலையில் விவாதிக்க தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். பாஜக கட்சி அலுவலகம் மீது நடைபெற்ற பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்து பேசிய அவர், பாஜக தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  - குணாநிதி ஆனந்தன், செய்தியாளர்

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Annamalai, CM MK Stalin, Dravidam