Home /News /viluppuram /

விழுப்புரத்தில் தனியார் கல்லூரியின் மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை முயற்சி.. போலீசார் குவிப்பு

விழுப்புரத்தில் தனியார் கல்லூரியின் மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை முயற்சி.. போலீசார் குவிப்பு

விழுப்புரம் கல்லூரி மாணவிக்கு சிகிச்சை

விழுப்புரம் கல்லூரி மாணவிக்கு சிகிச்சை

Villupuram : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி வளாகத்தில் பொறியியல் கல்லூரி, மருந்தியல் கல்லூரி, கட்டிடவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி என பல வகையான கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அங்கு, மருந்தியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் விழுப்புரம் மணி நகரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் இன்று காலை கல்லூரி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரியில் இருந்த பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், ரத்தத்துடன் மயங்கிய நிலையில் இருந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் மாணவி அனுமதிக்கப்பட்டு தற்போது, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடலில் பல்வேறு இடங்களிலும் காயம் ஏற்பட்டிருப்பதால் இடுப்பு, தொடை பகுதிகளில் அறுவை  சிகிச்சை செய்யும் பணியில் மருத்துவர்கள் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி தொடர்ந்து சுய நினைவின்றி இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

    இதற்கிடையே விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பரமேஸ்வரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் சென்று மாணவிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த திண்டிவனம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷக் குப்தா, விழுப்புரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதாகவும், விசாரணை முடிவிலேயே முழு விவரம் தெரிய வரும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.

    Must Read : 17வயது சிறுமியை கடத்தி மது கொடுத்து பாலியல் வன்கொடுமை - புதுக்கோட்டையில் கொடூரம்

    இந்நிலையில், மாணவி சிகிச்சை பெற்று வரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கல்லூரி முன்பு, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் கல்லூர் அமைச்சர் உயர்கவித்துறை பொன்முடிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - ஆ.குணாநிதி, விழுப்புரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: College girl, Suicide attempt, Villupuram

    அடுத்த செய்தி