ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழா.. விழுப்புரத்தில் விசித்திரம்..!

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழா.. விழுப்புரத்தில் விசித்திரம்..!

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழா

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழா

Mens Pongal 2023 : விழுப்புரம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோதமான பொங்கல் திருவிழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கொள்ளிடக்கரையில் தென்பகுதியில் வசித்து வந்த முன்னோர்கள்

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த நைனார்மண்டபம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் குடியேறினர். இதையடுத்து, இப்பகுதியில் வசிக்கும் ஆண்கள் மட்டும் வம்சா வழியாக அப்பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி வீரனார் கோவில் குளக்கரையில் ஆண்டுதோறும் போகி பண்டிகைக்கு பொங்கலிட்டு வழிபடுகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் ஆண்டுதோறும் விசித்திரமான முறையில் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டும் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆண்கள் 16வது தலைமுறையாக நேற்று போகி பண்டிகையையொட்டி மண் பானையில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் இரவு ஊர்வலமாக அவரவர் வீட்டிற்குச் சென்று படையலிட்டனர். மேலும் பொங்கல் தினமான இன்று கிராமத்தில் உள்ள வெள்ளந்தாங்கி அய்யனார் கோயிலில் ஒன்றுகூடிய ஆண்கள், 50க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கலிட்டு இறைவனுக்கு படையலிட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், “இப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக பொங்கலிட்டு வருகிறோம். பெண்களை இவ்விழாவில் அனுமதிக்காத நடைமுறை உள்ளதால், அதை மாற்ற விரும்பவில்லை. விவசாயம், கால்நடைகள் செழிக்கவும், தலைமுறை தழைத்தோங்கவும் இந்த பொங்கல் விழா நடக்கிறது” என்றனர்.

மேலும், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த திருவிழாவில் பெண்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. காலம் காலமாக மூதாதையர் பின்பற்றி வரும் இந்த பழக்கத்தை தாங்களும் கடைப்பிடிப்பதால், விவசாயம், கால்நடைகள் மட்டுமல்லாது, தங்களது தலைமுறைகளும் தழைத்தோங்கும் என நைனார்மண்டபம் கிராம மக்கள் நம்புகின்றனர்.

First published:

Tags: Local News, Pongal 2023, Villupuram