ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

விசாரணைக்கு வந்த கர்ப்பிணி உட்பட 4 இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை : காவல் ஆய்வாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

விசாரணைக்கு வந்த கர்ப்பிணி உட்பட 4 இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை : காவல் ஆய்வாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசன்

காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசன்

வழக்கில் தொடர்புடைய காவலர்கள் 4 பேர் ஏற்கனவே ஜாமின் பெற்று விட்ட நிலையில் இவ்வழக்கில் முதல் குற்றவாளியான காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் மட்டும் தொடர்ந்து ஜாமின் பெறமால் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Viluppuram, India

  திருக்கோயிலூர் அருகே 4 பழங்குடி இருளர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறை ஆய்வாளரை 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.

  விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இருளர் சமூதாயத்தைச் சேர்ந்த சிலரை கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு வழக்கு ஒன்றிற்காக திருக்கோவிலூர் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு  விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

  முன்னதாக  திருக்கோவிலூர் காவல்துறையினர், மண்டபம் கிராமத்தில் உள்ள பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தியதோடு, விசாரணை என்ற பெயரில் பழங்குடியின இருளர் சமூதாயத்தைச் சேர்ந்த 4 பெண்களை காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.

  அப்போது ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பழங்குடியின இருளர் பெண்களை, அங்குள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று திருக்கோவிலூர் காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன், பக்தவச்சலம் உள்ள 5 காலவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டத்தோடு, அவர்கள் மீது திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  இதையும் படிக்க : நடிகை மீரா மிதுனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

  பின்னர், இவ்வழக்கு  விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது.

  இந்நிலையில் பழங்குடியின இருளர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய காவலர்கள் 4 பேர் ஏற்கனவே ஜாமீன் பெற்று விட்ட நிலையில் இவ்வழக்கில் முதல் குற்றவாளியான காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் மட்டும் தொடர்ந்து ஜாமின் பெறமால் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

  இதனையறிந்ததும் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடி காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் தலைமறைவானார். இதனையடுத்து பணியிடம் வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.

  இந்நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று காலை திடீரென நேரில் ஆஜராகி நீதிபதி பாக்யஜோதி முன்னிலையில் சரணடைந்தார். வழக்கை சிறிது நேரத்திற்கு பிறகு விசாரிப்பதாக கூறிய நீதிபதி பாக்யஜோதி, அதுவரை காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசனை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறு அங்கு பணியில் இருந்த காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

  இதனைத்தொடர்ந்து காவலர்களின் பாதுகாப்புடன் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், நீதிமன்ற அறை முன்பாகவே பல மணி நேரம் காத்திருந்தார். உணவு இடைவேளை முடிந்து சுமார் 3 மணி நேர காத்திருப்பிற்கு பிறகு வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி பாக்யஜோதி, காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசனை வரும் 28ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசனை, பலத்த பாதுகாப்புடன் விழுப்புரம் அருகிலுள்ள வேடம்பட்டு சிறைக்கு அழைத்து சென்றனர்.

  இந்நிலையில் சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Irular, Police, Police Inspector