ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

வாகன சோதனை செய்த போலீசாரிடம் இ-சலான் கருவியை பறித்த சென்ற மர்ம நபர்கள்.! - திண்டிவனம் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!

வாகன சோதனை செய்த போலீசாரிடம் இ-சலான் கருவியை பறித்த சென்ற மர்ம நபர்கள்.! - திண்டிவனம் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!

காவல் நிலையம் - வாகன சோதனை செய்யும் சாலை

காவல் நிலையம் - வாகன சோதனை செய்யும் சாலை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் இருந்து அபராதம் விதிக்க பயன்படுத்தப்படும் இ.சலான் கருவியை பறித்த சென்ற மர்ம நபர்களால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூர் என்ற இடத்தில் மதுவிலக்கு போலீசாரின் சோதனைச் சாவடி அமைந்துள்ளது.

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் என்பதால் நேற்று அதிகாலை முதலே இந்த மதுவிலக்கு சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக வந்த இருச்சக்கர வாகனத்தை போலீசார் சைகை காட்டி நிறுத்தமாறு கூறினர்.

அப்போது நிற்பது போல பாவ்லா காட்டிவிட்டு இருச்சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த 2 மர்ம நபர்கள், போலீசார் கையில் வைத்திருந்த அபராதம் விதிக்க பயன்படுத்தப்படும் இ.சலான் கருவியை திடீரென பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர்.

Also see... சபரிமலையில் நாளை மண்டல பூஜை... 450 சவரன் எடை கொண்ட தங்க அங்கியில் தரிசனம் தரவுள்ள ஐயப்பன்!

இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் சுதாரித்து கொண்டு இ.சலான் கருவியை பறித்து கொண்டு சென்றவர்களை விரட்டி சென்றனர். ஆனால் அந்த இருச்சக்கர வாகனம் மின்னல் வேகத்தில் சென்று மறைந்துவிட்டது.

இதனையடுத்து அந்த வழியாக உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இ.சலான் கருவியை பறித்து கொண்டு தப்பி சென்றவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருச்சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்களிடம் இ.சலான் கருவியை பறிகொடுத்த கிளியனூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களான திருஞானம், கார்த்திக் ஆகியோரிடம் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா விசாரணை நடத்தி வருகிறார்.

வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் இருந்து அபராதம் விதிக்க பயன்படுத்தப்படும் இ.சலான் கருவியை இருச்சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்

First published:

Tags: Police, Villupuram Constituency