விழுப்புரத்தில் லோன் ஆப் மூலம் பெற்ற பணத்தை முழுமையாக செலுத்தியும், பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறித்துள்ளது வட மாநில கும்பல்.
விழுப்புரத்தை சேர்ந்த 40வயது மதிக்கத்தக்க பெண் கணவர் கைவிட்ட நிலையில் வீட்டில் இருந்தபடியே தேவைப்படுவோருக்கு சமையல் செய்து கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் கேஷ் ருபிக் என்ற ஆப் மூலம் ரூ. 4,000 பெற்று மீண்டும் அதனை செலுத்தியுள்ளார். தொடர்ந்து ரூபி ஸ்டார் என்ற ஆப் மூலம் 6,000 ரூபாய் பெற்று அதனையும் திருப்பி செலுத்தியுள்ளார்.
பணத்தை முழுமையாக செலுத்திய பின்னரும் தொலைபேசி வழியாகவும், வாட்ஸ்ப் செய்தி வழியாகவும் தொடர்ந்து பணம் செலுத்தக் கூறிகட்டாயப்படுத்தியுள்ளனர். மிரட்டல் வந்த தொலைப்பேசி எண்களை பிளாக் செய்தும் வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்ந்து மிரட்டப்பட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில், அவர்கள் சொல்லும் தொகையை கட்டச் சொல்லி மிரட்ட ஆரம்பித்த வடமாநில கும்பல், பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியுள்ளது. பணம் கட்டவில்லை என்றால் இந்த புகைப்படங்களை உறவினர்கள், மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவிடுவோம் என்றும் மேலும் சமூக வளைதளத்தில் பரப்பிவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவர் உறவினர்கள், நண்பர்களிடம் கடன் பெற்று மூன்றரை லட்சம் ரூபாய் அளவுக்கு வடமாநில கும்பல் சொன்ன பல்வேறு வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளார். தற்போது கடன் கொடுத்த உறவினர்கள் பெண்ணிடம் பணத்தை திரும்ப கேட்டு வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பேசுகையில், “ லோன் ஆப் மூலம் பணம் பெற்று அதனை திரும்ப செலுத்திவிட்டதாகவும், இருப்பினும் என்னுடைய புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டியதால் மூன்றரை லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று கட்டியுள்ளதாகம், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் கூறுகிறார்.
மேலும், என்னுடைய புகைப்படத்தை தவறாக சித்தரித்து என்னுடைய உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர், அதனால் உறவினர்களும் எனக்கு உதவ முன்வரவில்லை என வேதனை தெரிவிக்கிறார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக கூறும் அவர், தமிழக அரசு இது போன்ற லோன் ஆப்களை தடைசெய்ய வேண்டும் என்றும் என்னை போல் வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதால் இதனை வெளியில் சொல்வதாகக் கூறுகிறார். மேலும் தமிழக அரசு எனக்கு உதவ முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துளளார்.
Must Read : சிறுமிகள் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை.. காட்டிக்கொடுத்த செல்போன் வீடியோ - இளைஞர் கைது
தமிழகத்தில் இது போன்ற லோன் ஆப்கள் மூலம் கடன் பெற்ற பலர் இதே பானியில் மிரட்டப்பட்டு பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வடமாநில கும்பலால் இப்படியான மிரட்டலுக்கு ஆளாகி பாதிக்கப்படும் மக்களின் நிலை உணர்ந்து, இதுபோன்ற செயலில் ஈடுபடும் வடமாநில கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் - ஆ.குணாநிதி, விழுப்புரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Loan app, Villupuram