ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த மர்மநபர்கள்.. விழுப்புரத்தில் பரபரப்பு..!

அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த மர்மநபர்கள்.. விழுப்புரத்தில் பரபரப்பு..!

அண்ணா சிலை

அண்ணா சிலை

Viluppuram | அண்ணா சிலையின் முகத்தில் காவி துண்டு அணிவித்து கழுத்தில் செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Viluppuram | Viluppuram | Tamil Nadu

  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அனிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் கடந்த 1971ஆம் ஆண்டு பெரியாரால் அண்ணா சிலை திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள அண்ணா சிலையின் முகத்தில் காவி துண்டு அணிவித்து கழுத்தில் செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.

  மேலும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக  துணை பொதுச் செயலாளருமான ஆ. ராசாவின் புகைப்படத்தை அண்ணாவின் கழுத்தில் தொங்கவிட்டு, ஆ.ராசாவின் புகைப்படத்தில் பொட்டு வைத்துள்ளனர்.

  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த திமுகவினர் அனைத்தையும் அகற்றிவிட்டு, போலீசாரிடம் புகார் அளித்தனர். அண்ணா சிலை முன்பு ஏராளமான திமுகவினர் திரண்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. போலீசார், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: குணநிதி ஆனந்தன்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Anna, Crime News, Statue, Viluppuram S22p13