தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் செஞ்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்தின் நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் மாரிமுத்து .தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறந்த தணிக்கையாளர்களுக்கான விருதினை வழங்கினார்.
இந்த கூட்டத்தில், நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையினை உடனடியாக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், கொரோனா காலகட்டத்தில் கடல் தாண்டி வாழும் வெளிநாடு வாழ் தமிழர்கள் பல கஷ்டங்களிலும் நிதி உதவி அளித்ததாக பெருமையாக பேசினார். மேலும், தமிழ்நாடு அரசின் நிதிநிலை தற்போது சீராகி வரும் நிலையில், இனிவரும் காலங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு வரும். பழைய ஓய்வூதியத்திட்டத்தினை தமிழக அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. எனவே, நிதிநிலை சீரானதும் அனைவரின் வேண்டுகோளையும் நிச்சயம் தமிழக முதல்வர் நிறைவேற்றுவார் என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை கேட்ட அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.
செய்தியாளர்: குணநிதி ஆனந்தன், விழுப்புரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Minister, Villupuram, Viluppuram S22p13