Home /News /viluppuram /

ஆவணி அமாவாசை.. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஆவணி அமாவாசை.. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி - ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி - ஊஞ்சல் உற்சவம்

Viluppuram | விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயத்தில் ஆவணி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையானூர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமான ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி திருக்கோயில். இங்கு மாதந்தோறும் அம்மாவாசை தினத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

    இதனிடையே ஆவணி மாதம் அமாவாசை தினமான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவர் அம்மனுக்கு பால், நெய், பழரசம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு பட்டு உடுத்தி காஞ்சி காமாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அமாவாசை தினம் என்பதால் காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் மேல்மலையனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த நிலையிலும் பக்தர்கள் நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை கண்டு அம்மனை தரிசிக்க குடை பிடித்து காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து நள்ளிரவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியில் உற்சவ மண்டபத்தில் அங்காளம்மனை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல் பாடப்பட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், சூடம் மற்றும் நெய் விளக்கு ஏற்றியும், ஓம் சக்தி.. பராசக்தி.. அங்காளம்மா தாயே..அருள் புரிவாயே.. என அங்காளம்மனை வழிபட்டனர்.

    ஊஞ்சல் உற்சவத்தில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி


    Also see... திருப்பதி போக திட்டமா? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்

    பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple, Villupuram

    அடுத்த செய்தி