முகப்பு /செய்தி /விழுப்புரம் / ஒரு தலைக் காதலால் விபரீதம்... இளம்பெண்ணை சந்திக்க நள்ளிரவில் சென்ற இளைஞர் மர்ம மரணம்..!

ஒரு தலைக் காதலால் விபரீதம்... இளம்பெண்ணை சந்திக்க நள்ளிரவில் சென்ற இளைஞர் மர்ம மரணம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

தன்னை பாலியல் இச்சைக்கு பணிய வைப்பதற்காக தூக்கு மாட்டிக் கொள்வதாக செல்வத்துரை நாடகமாடினார்.அப்போது நாற்காலி சரிந்ததில் நிலைதடுமாறி செல்வத்துரை கீழே விழுந்ததாகவும், இதில் அவரது பின்பக்க தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாகவும் போலீசில் ஷர்மிளா தெரிவித்து இருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் காந்தலவாடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு கோயிலின் பின்புறம் இறந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்தது. இறந்து கிடந்த இளைஞர் தலையின் பின்புறம் ரத்த காயம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.

திருவெண்ணைநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் காந்தலவாடி கிராமத்தை சேர்ந்த செல்வதுரை என்பது தெரியவந்தது. நெல் அறுவடை இயந்திர ஓட்டுநரான செல்வதுரையின் செல்போன் எண்ணை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். உயிரிழந்த செல்வதுரை கடைசியாக கெடிலம் கோபாலகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த அய்யனார் மனைவி ஷர்மிளாவிடம் பேசியதை போலீசார் கண்டுபிடித்தனர். ஷர்மிளாவிடம் நடத்திய விசாரனையில் பல தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தன.

இதையும் படிங்க; எவ்வளவு முயன்றாலும் உங்களால் கூட்டணியை உடைக்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

செல்வதுரை ஷர்மிளாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷர்மிளாவுக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். தற்போது ஷர்மிளாவுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. திருமணத்திற்கு முன்பாக ஷர்மிளா குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார் செல்வதுரை. அந்த வீடியோவை காட்டி மிரட்டி அடிக்கடி ஷர்மிளாவை தனிமையில் வரச்சொல்லி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இந்த நிலையில் ஷர்மிளாவின் கணவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சிங்கபூர் சென்றுவிட்டார். வீட்டில் குழந்தையுடன் இருந்த தன்னை உறவுக்கு வரச்சொல்லி செல்வத்துரை அடிக்கடி கொடுமை செய்ததாக ஷர்மிளா குற்றம் சாட்டியிருக்கிறார். கடந்த 27-ம் தேதி தனிமையில் சந்திக்க கட்டாயப்படுத்தியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை பாலியல் இச்சைக்கு பணிய வைப்பதற்காக தூக்கு மாட்டிக் கொள்வதாக செல்வதுரை நாடகமாடினார்.

அப்போது நாற்காலி சரிந்ததில் நிலைதடுமாறி செல்வத்துரை கீழே விழுந்ததாகவும், இதில் அவரது பின்பக்க தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாகவும் போலீசில் ஷர்மிளா தெரிவித்து இருக்கிறார். உடலை மறைப்பதற்காக கல்லூரி நண்பர்கள் பரத், ராஜ்குமார், ஆனந்தன் ஆகியோரிடம் உதவி கேட்டதாக ஷர்மிளா வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஷர்மிளாவின் வீட்டிற்கு வந்த பரத், ராஜ்குமார், ஆனந்தன் இரு சக்கர வாகனத்தில் செல்வதுரையின் உடலை வைத்து எடுத்து சென்றுள்ளனர். பின்னர் தேசிய நெடுஞ்சாலை ஒரமாக இருந்த கோயிலின் பின்புறம் போட்டுவிட்டு வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ஷர்மிளா, பரத், ராஜ்குமார், ஆனந்தன் ஆகியோரை கைது செய்தனர்.

செய்தியாளர் : ஆ.குணாநிதி (விழுப்புரம்)

First published:

Tags: Died, Mysterious death, Viluppuram S22p13