ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

போலி நகையை வைத்து தங்க நகையை எடுத்து சென்ற பெண்.. சிசிடிவியில் அம்பலமான கொள்ளை..!

போலி நகையை வைத்து தங்க நகையை எடுத்து சென்ற பெண்.. சிசிடிவியில் அம்பலமான கொள்ளை..!

நூதன கொள்ளை

நூதன கொள்ளை

Villupuram | கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Viluppuram | Viluppuram | Tamil Nadu

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து போலி நகையை கொடுத்து ஏமாற்றிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சன்னதி தெருவில் நகை கடை வைத்துள்ளவர் சண்முகம். இவர் கடைக்கு நேற்று கம்மல் வாங்குவது போல வந்த பெண் ஒருவர் நகைகளை கையில் வாங்கி பார்த்துள்ளார். அப்போது யாரும் கவனிக்காத நேரத்தில் அந்த பெண் தன்னிடம் இருந்த கவரிங் நகையை மாற்றி வைத்து விட்டு தங்க நகையை கைப்பையில் வைத்துக்கொண்டு, நகை வேண்டாம் எனக்கூறிவிட்டு சென்றுவிட்டார்.

  பெண்னின் மீது சந்தேகமடைந்த  கடை உரிமையாளர் நகையை சோதனை செய்தார். அப்போது அந்த நகை போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நகை கடை உரிமையாளர் சண்முகம் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  இதையும் படிங்க | Gold Rate: நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம்.. குறைந்தது தங்கம் விலை..!

  புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  செய்தியாளர்: குணாநிதி, விழுப்புரம்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Theft, Viluppuram S22p13